நீர்கொழும்பு வீடு ஒன்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

0 1,743

                                                                                                         (நீர்கொழும்பு நிருபர்)
நீர்கொழும்பு தளுபத்தை பல்லன்சேனை வீதியில் பிரான்சிஸ் சாலிஸ் மாவத்தையில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று இன்று (09) மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் உயிரிந்ததாகக் கருதப்படும் திருமணமான பெண் ஒருவரின் சடலமே பழுதடைந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இறந்தவரின் வீட்டுக்கருகில் வசிப்பவர்கள் குறித்த வீட்டிலிருந்து துர்மணம் வீசுவதாகப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்தே அங்கு சென்ற பொலிஸார் விட்டைத் திறந்து பார்த்தபோது வீட்என் அறை ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டது. பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!