வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 10: 1949 -சுதந்திரத்துக்குப் பின் இலங்கை இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டது

0 412

680 : முஹம்மது நபிகள் நாயகத்தின் பேரன் ஷியா இமாம் உசேன் பின் அலி, கலீபா முதலாம் யாஸிதியின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முஸ்லிம்களினால் இந்நாள் ஆஷஷுராஹ் என அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

1949: சுதந்திரத்துக்குப் பின் இலங்கை இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டது

1780 : கரீபியன் பிராந்தியத்தில் தாக்கிய பெரும் றாவளியினால் சுமார் 30, 000 பேர் வரை இறந்தனர்.

1868 : கியூபாவின் முதலாவது சுதந்திரப் பிரதேசம் “லாடெமஹாகுவா” பகுதியில் கார்லோஸ் செஸ்பெடஸ் என்பவர் தலைமையில் அறிவிக்கப்பட்டது.

1911 : சீனாவில் ச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது.

1942 : அவஸ்திரேலியாடன் சோவியத் ஒன்றியம் ராஜதந்திர உறவை ஏற்படுத்தியது.

1943 : ஜப்பானியரின் பிடியில் இருந்த சிங்கப்பூரில் துறைமுகம் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக 57 அப்பாவிகள் ஜப்பானியர்களினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.

1944: இரண்டாம் உலகப் போரின்போது 800 ஜிப்சி சிறுவர்கள் அவுட்ஸ்விச் வதைமுகாமில் படுகொலை செய்யப்பட்டனர்.

1945: போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினரும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தனர். இது இரட்டை பத்து உடன்பாடு என அழைக்கப்படுகிறது.

1949: இலங்கை சுதந்திரம் பெற்றபின் இலங்கை இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டது.

1957: ஐக்கிய இராச்சியம், கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது அணுக்கரு உலை விபத்து இடம்பெற்றது.

1967: விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகளால் 1967 ஜனவரி 27 ஆம் திகதி கையெழுத்திட்ட உடன்பாடு அமுல் படுத்தப்பட்டது.

1970: ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஃபிஜி சுதந்திரம் பெற்றது.

1970: கனடாவின் மொண்ட்றியால் நகரில் கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணி தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர்.

1987: இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் மூண்டது

1971: விற்பனை செய்யப்பட்டுபாகங்களாக அமெரிக்காக்குக் கொண்டுசெல்லப்பட்ட லண்டன் பாலம் அரிசோனாவின் லேக் ஹவாசு நகரில் மீள ஸ்தாபிக்க்பட்டு திறக்கப்பட்டது.

1973: அமெரிக்க உப ஜனாதிபதி ஸ்பைரோ அக்னிவ் வரி மோசடி குற்றச்சாட்டின் காரணமாக அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

1986: 7.5 ரிச்டர் அளவு நிலநடுக்கம் எல் சல்வடோர் நாட்டில்சான் சல்வடோர் நகரைத் தாக்கியதில் 1,500 பேர் இறந்தனர்.

1987: இந்திய அமைதிப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.

1991: தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் ஸ்தாபிக்கப்பட்டது.

1997: உருகுவேயில் விமானமொன்று வெடித்துச் சிதறியதால் 74 பேர் உயிரிழந்தனர்.

1998: கொங்கோவில் விமானமொன்று கிளர்ச்சியாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டதால் 41 பேர் உயிரிழந்தனர்.

2008: பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களால் 110 பேர் உயிரிழந்தனர்.

2012: இலங்கை உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

2015: துருக்கியின் தலைநகர் அன்காராவின் பிரதான ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புகளில் 102 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 400 பேர் காயமடைந்தனர்

2018: அமெரிக்காவில் மைக்கல் சூறாவளியினால் 57 பேர் கொல்லப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!