சாய்ந்தமருதுவில் ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இருவர் கைது!

0 800

                                                                                 (பாறுக் ஷிஹான்)
ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் இருவர் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருதுவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் முன்னால் பொதி ஒன்றுடன் இருவர் சந்தேகத்துக்கிடமாக நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றையடுத்து மாறுவேடம் அணிந்து சென்ற மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் குறித்த சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர்களாவர். இவர்களிடமிருந்து 3 கஜ முத்துக்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கைது நடவடிக்கை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த வழிகாட்டலில் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் வை அருணன் சார்ஜன்ட் ஏ.எல்.எம் றவூப் (63188) கான்ஸ்டபிள்களான நவாஸ் (44403) கீர்த்தனன் (6873) அமலதாஸ்(73593) ஆகியோர் முன்னெடுத்தனர்.
கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்களின் பெறுமதி ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். கைதான சந்தேக நபர்கள் இருவரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!