மார்பகம் வளர்வதாக கூறிய ஆணுக்கு 800 கோடி டொலர் இழப்பீடு வழங்குமாறு ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்துக்கு உத்தரவு

Johnson & Johnson must pay $8 billion over drug side effect: jury

0 3,391

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) நிறுவனம் இளைஞர் ஒருவருக்கு 800 கோடி அமெரிக்க டொலர் (சுமார் 144,448 கோடி இலங்கை ரூபா, 56,854 கோடி இந்திய ரூபா) இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றமொன்றின் ஜுரிகள் குழாமொன்று உத்தரவி;ட்டுள்ளது.

26 வயதான நிக்கலஸ் மறே எனும் இளைஞருக்கே இந்த இழப்பீட்டை வழங்குமாறு நீதிமன்ற ஜூரிகள் குழாம் உத்தரவி;ட்டுள்ளது.

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட மருந்து ஒன்றை பயன்படுத்தியதால் தனது மார்பகங்கள் வளர்ந்ததாகவும், இம்மருந்தை பயன்படுத்தினால் மார்பகம் வளரும் என இந்நிறுவனம் எச்சரிக்கை செய்யவில்லை எனவும் நிக்கலஸ் மறே குற்றம் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலடெல்பியா நகரிலுள்ள நீதிமன்றம் ஜூரிகள் குழாமொன்று, நிக்கலஸ் மறேவுக்கு 8 பில்லியன் (800 கோடி) டொலர்களை வழங்குமாறு உத்தரவிட்டது.

இந்த இழப்பீ;ட்டுத் தொகை பொருத்தமற்ற அளவானது என ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் இது போன்ற பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!