இருபது20 தொடரில் பாகிஸ்தானுக்கு வெள்ளையடித்தது இலங்கை அணி

0 868

பாகிஸ்தான் அணியுடனான சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றியீட்டி பாகிஸ்தான் அணிக்கு வெள்ளையடித்துள்ளது.

லாகூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 13 ஓட்டங்களால் தசுன் ஷாகனக தலைமையிலானஇலங்கை அணி வெற்றியீட்டியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களி;ல் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களைக் குவித்தது.

ஓஷத பெர்னாண்டோ 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களைக் குவி;த்தார். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் மொஹம்மத் அமீர் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களையே பெற்றது. ஹரீஸ் சொஹைல் 50 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் வனிந்து ஹசரங்க 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லஹிரு குமார 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் வனிந்து ஹசரங்க தெரிவானார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!