வாக்களிப்பதற்காக கைதிகளுக்கும் அனுமதி வழங்க உத்தரவிட கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!

0 124

(ரெ.கிறிஷ்­ணகாந்)

ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்­காக சிறைக்­கை­திகள் மற்றும் விளக்­க­ ம­றி­ய­லி­லுள்ள சந்­தேக நபர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கு­மாறு தேர்தல் ஆணைக்­கு­ழு­வுக்கு உத்­த­ர­வி­டக்­கோரி, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

சிறைக்­கை­தி­களின் உரி­மை­களை பாது­காக்கும் அமைப்­பினால் இந்த மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த மனுவில், தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய உட்­பட அவ்­வா­ணைக்­கு­ழுவின் அங்­கத்­த­வர்கள் நால்வர் மற்றும் சிறைச்­சாலை ஆணை­யாளர் நாயகம் ஆகியோர் எதிர்­ம­னு­தா­ரர்­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

தேர்­தல்­களில் வாக்­க­ளிப்­ப­தற்கு சிறைக்­கை­தி­க­ளுக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­டா­மை­யினால் அவர்­க­ளுக்­கான வாக்­க­ளிப்­ப­தற்­கான வாய்ப்பு இல்­லாது போகின்­றது. அர­சி­ய­ல­மைப்பின் 89 ஆவது சரத்­துக்­க­மைய இத்­த­கைய தேர்­தல்­களில் வாக்­க­ளிக்க தகு­தி­யற்­ற­வர்­களின் பட்­டியல் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­கவும், அதில் சிறைக்­கை­திகள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்கும் மனு­தாரர் இதனால் வாக்­க­ளிப்­ப­த­றக்­காக அவர்­க­ளுக்கு உள்ள உரிமை மீறப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே, சிறைச்­சா­லை­க­ளி­லுள்ள சிறைக்­கை­தி­க­ளுக்கு எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் தமது வாக்கினை அளிப்பதற்கு அனுமதியளிக்க தேர்தல் ஆணைக்குழு மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!