5 நாட்களான குழந்தை விற்பனை தொடர்பில் தாயும் வளர்ப்புத் தாயும் கம்பளையில் கைது!

0 204

ரெ.கிறிஷ்­ணகாந்

பிறந்து ஐந்து நாட்­க­ளே­யான ஆண் குழந்தை ஒன்றை சட்­ட­வி­ரோ­த­மான முறையில் விற்­பனை செய்த தாயை யும், வளர்ப்புத் தாயையும் கம்­பளை பொலிஸார் கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.

பெண் ஒருவர், பிறந்து ஐந்து நாட்­க­ளே­யான குழந்தை ஒன்றை சட்­ட­வி­ரோ­த­மான முறையில் பணத்­துக்கு பெற்று, வளர்த்து வரு­வ­தாக உள­வாளி ஒரு­வரால் கடந்த செப்­டெம்பர் 30 ஆம் திகதி வழங்­கப்­பட்ட தக­வ­லுக்­க­மைய கண்டி சிறுவர் மற்றும் மகளிர் பணி­ய­கத்தின் பொறுப்­ப­தி­காரி, பொலிஸ் பரி­சோ­தகர் அயேஷா பண்­டார தலை­மை­யி­லான குழு­வினர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

இந்த தக­வ­லுக்­க­மைய மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில், கடந்த செப்­டெம்பர் 11 ஆம் திகதி கம்­பளை வைத்­தி­ய­சா­லையில் இந்த ஆண் குழந்தை பிறந்­துள்­ளது என தெரி­ய­வந்­துள்­ளது.

அத்­துடன், அப்­பெண்­ணுக்கு மேலும் இரு பிள்­ளைகள் இருப்­ப­தாலும், இந்தக் குழந்­தை­யையும் வளர்த்­தெ­டுப்­ப­தற்கு பொரு­ளா­தார ரீதியில் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ள­தாலும் கம்­ப­ளையைச் சேர்ந்த சட்­டத்­த­ரணி ஒரு­வரின் முன்­னி­லையில் சத்­தி­ய­க­ட­தாசி ஊடாக சம்­மதம் தெரி­வித்து, கம்­பளை நக­ரி­லுள்ள மேற்­படி முக­வ­ரியைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ருக்கு 40 ஆயிரம் ரூபா­வுக்கு தனது குழந்­தையை விற்­பனை செய்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

மேல­திக விசா­ர­ணை­க­ளின்­போது, இந்தக் குழந்தை சட்­ட­வி­ரோ­த­மான முறையில் விற்­பனை செய்­த­தா­கவும் இந்த விவ­காரம் கம்­பளை பொலிஸ் வல­யத்­துக்கு உட்­பட்ட பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாலும் கண்டி வல­யத்­துக்கு பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்­சகர் எஸ்.எம். தென்­ன­கோனின் அறி­வு­றுத்­த­லுக்­க­மைய, கம்­பளை வல­யத்­துக்கு பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிரி­யந்த பீரிஸின் தக­வ­லின்­படி கம்­பளை பொலி­ஸாரால் சந்­தே­க­ந­ப­ரான பெண் (குழந்­தையைப் பெற்ற தாய்) கைது செய்­யப்­பட்­ட­துடன், பாது­காப்­புக்­காக குறித்த குழந்­தையும் கடந்த 01 ஆம் திகதி பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், குறித்த குழந்தை சிறுவர் இல்­லத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள அதே­வேளை, குழந்­தையை வாங்­கி­ய­தாகக் கூறப்­படும் போலி தாயும் கம்­பளை பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் நிறை­வ­டையும் வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு சிறுவர் இல்­லத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள அதேவேளை, குழந்தையை வாங்கியதாகக் கூறப்படும் போலி தாயும் கம்பளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Police.lk

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!