பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ விளக்கமறியலில்

0 78

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு அல்­லது அதன் தாக்­கங்­களைக் குறைத்துக் கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்பில் குற்­ற­வியல் பொறுப்புச் சாட்­டப்­பட்டு, கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் பாது­காப்புச் செயலர் ஹேம­சிறி பெர்­னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர ஆகியோர் மேல் நீதி­மன்ற உத்­த­ர­வை­ய­டுத்து கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்­றினால் நேற்று விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

பாது­காப்புச் செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர ஆகியோர் நீதிவான் நீதி­மன்­றினால் பிணையில் விடு­விக்­கப்­பட்­டதை ஆட்­சே­பித்து சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதி­மன்றில் மீளாய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்­தி­ருந்தார்.

படங்கள் – ஜே.சுஜீவகுமார்

 

அம்­மனு மீதான தீர்ப்பு நேற்று அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே குறித்த இரு­வ­ரையும் எதிர்­வரும் 23 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன உத்­த­ர­விட்டார்.

கடந்த ஜூலை 9 ஆம் திகதி கொழும்பு பிர­தான நீதிவான் வழங்­கிய பிணை உத்­த­ரவு தவ­றா­னது என்­பதை சுட்­டிக்­காட்டும் 7 விட­யங்­களை உள்­ள­டக்கி சட்ட மா அதிபர் மீளாய்வு மனுவை தாக்கல் செய்­தி­ருந்தார். இந்த மனு கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி விக்கும் களு ஆரச்சி முன்­னி­லையில் விசா­ரிக்­கப்­பட்­டது.

சந்­தேக நபர்­க­ளான ஹேம­சிறி சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுஜ பிரே­ம­ரத்­னவும் பூஜித் ஜய­சுந்­தர சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுர மெத்­தெ­கொ­டவும் ஆஜ­ராகி வாதிட்­டனர். சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வாதிட்­டி­ருந்தார்.

பிர­தான நீதிவான் சட்­டத்தைத் தவ­றாகப் புரிந்­து­கொண்­டுள்­ளமை, சம்­பவ சான்­று­களை மையப்­ப­டுத்தி முன்­வைக்­கப்­பட்ட தண்­டனை சட்டக் கோவையின் 296 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் குற்­றச்­சாட்டு சுமத்த முடி­யாது எனக் கூறி­யமை உறு­தி­யான உள­வுத்­த­க­வல்­களை தெளி­வற்ற உளவுத் தக­வல்கள் என தனது தீர்ப்பில் குறிப்­பிடல், சந்­தேக நபர்கள் ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட விசா­ரணைக் குழு அறிக்­கையை மையப்­ப­டுத்­தியே கைது செய்­யப்­பட்­ட­தாக நீதிவான் தீர்ப்பில் தெரி­வித்­தமை, அடிப்­ப­டை­யற்ற பக்­கச்­சார்­பான உத்­த­ரவு, சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமைய மட்­டுமே செயற்­பட வேண்­டு­மில்லை என நீதிவான் கூறி­யுள்ள விதம் உள்­ளிட்ட 7 விட­யங்­களை மையப்­ப­டுத்தி சட்ட மா அதி­பரால் மீளாய்வு மனு தொடர்பில் வாதங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

எனினும் சந்­தேக நபர்கள் தரப்பில் நீதி­வானின் உத்­தரவு சரி­யா­னதே என வாதி­டப்­பட்­டது. இந்த பின்­ன­ணி­யி­லேயே குறித்த மீளாய்வு மனு தொடர்பில் நேற்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

இதன்­போது கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி நீதிவான் லங்க ஜய­ரத்ன வழங்­கிய பிணைத் தீர்ப்பு தவ­றா­னது எனவும் அதனை இரத்துச் செய்­வ­தா­கவும் மேல் நீதி­மன்றம் அறி­வித்­தது.

அதனால் ஜூலை 9 ஆம் திகதி பிணை தீர்ப்­புக்கு முன்னர் இருந்த நிலை­மையே சந்­தேக நபர்கள் இருவர் தொடர்­பிலும் செல்­லு­ப­டி­யாகும் எனவும் அது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க நீதிவான் நீதி­மன்­றுக்கு உத்­த­ர­வி­டு­வ­தா­கவும் மேல் நீதி­மன்ற தீர்ப்பில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்தத் தீர்ப்பு அறி­விக்­கப்­படும் போது ஹேம­சிறி பெர்­னாண்­டோவும், பூஜித் ஜய­சுந்­த­ரவும் மேல் நீதி­மன்­றி­லேயே இருந்த நிலையில் அவ்­வி­ரு­வ­ரையும் உட­ன­டி­யாக தமது பொறுப்பில் எடுத்து நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யு­மாறு மேல் நீதி­மன்ற நீதி­பதி களு­ஆ­ராச்சி சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

அதன்­படி சிறை அதி­கா­ரி­களின் பொறுப்பில் எடுக்­கப்­பட்ட இரு­வரும் நேற்று பிற்­பகல் கொழும்பு பிர­தான நீதிவான் லங்க ஜய­ரத்ன முன் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

இதன்­போது, கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன ‘ மேல் நீதி­மன்றின் தீர்ப்­புக்கு அமைய முன்னர் வழங்­கப்­பட்ட பிணை உத்­த­ரவு இரத்துச் செய்­யப்­ப­டு­கி­றது.

அத்­துடன் அந்தத் தீர்ப்பில் குறிப்­பிட்­டுள்ள விட­யங்­க­ளின்­படி கடந்த ஜூலை 9 ஆம் திக­திக்கு முன்னர் சந்­தேக நபர்கள் இருந்த நிலை­மையே செல்­லு­ப­டி­யா­வதால் அத்­தீர்ப்­புக்கு அமைய இரு­வ­ரையும் எதிர்­வரும் 23 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டு­கின்றேன் என்றார்.

இத­னை­ய­டுத்து குறித்த இரு சந்­தேக நபர்­களும் வெலிக்­கடை விளக்­க­ம­றியல் சிறைச்­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டனர்.
முன்­ன­தாக ஹேம­சிறி பெர்­னாண்டோ மற்றும் பூஜித் ஜய­சுந்­தர ஆகியோர் கடந்த ஜூலை 2 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

தண்­டனை சட்டக் கோவையின் 296, 298, 326,327, 328 மற்றும் 410 ஆம் அத்­தி­யா­யங்­களின் கீழ் இவர்கள் இரு­வரும் தண்­டனைக் குரிய குற்றம் ஒன்றை புரிந்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளமைள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!