கல்முனையில் காணாமல்போன மீனவர்களில் ஒருவர் உயிரிழப்பு: இருவர் திருமலையில்

0 624

                                                                                                                                               (தோப்பூர் நிருபர்)
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பகுதியிலிருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன மூன்று மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இரண்டு மீனவர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்றிரவு (09) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட மீனவர்கள் சாய்ந்தமருது ஹிஜ்ரா வீதியை சேர்ந்த இஸ்மாலெப்பை முஹம்மட் ஹாரிஸ் (37) மற்றும் சாய்ந்தமருது 13 சேர்ந்த முந்திரியடி பகுதியைச் சேர்ந்த சீனி முஹம்மது ஜூனைதீன் (36) நேற்றிரவு தெவுன்தர மீனவர்களினால் மீட்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!