ஈரானில் ஆடவர் கால்பந்தாட்டத்தை காண பெண்களுக்கு இன்று முதல் தடவையாக அனுமதி

0 910

ஈரா­னுக்கும் கம்­போ­டி­யா­வுக்கும் இடையில் நடை­பெ­ற­வுள்ள பீபா 2020 உலகக் கிண்ணம் மற்றும் 2023 ஆசிய கிண்ணம் ஆகி­ய­வற்றை முன்­னிட்டு அஸாத்ரி விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெ­ற­வுள்ள இணை தகு­திகாண் போட்­டியை ஈரான் ரசி­கைகள் பார்­வை­யிட அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஈரான் – கம்போடியா போட்டிக்காக தான் பெற்றுக்கொண்ட இலத்திரனியல் டிக்கெற்றை ஈரானிய ஊடகவியலாளர் ராஹா பௌர்பாக்ஸ் நேற்றுமுன்தினம் காண்பித்தபோது…

 

பல தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர் ஆடவர் கால்­பந்­தாட்டப் போட்­டியை நேர­டி­யாக கண்­டு­க­ளிக்க ஈரான் பெண்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளமை இதுவே முதல் தட­வை­யாகும்.

ஆடவர் கால்­பந்­தாட்டப் போட்­டி­களை ஆண்கள் மட்­டுமே கண்­டு­க­ளிக்­கலாம் என்ற சர்ச்­சைக்­கு­ரிய ஈரானின் கொள்­கையை அடுத்து ஈரா­னுக்கு தடை­வி­திக்க நேரிடும் என கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சர்­வ­தேச சம்­மே­ளனம் (பீபா) எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் ஆடவர் கால்­பந்­தாட்டப் போட்­டி­களைக் கண்­டு­க­ளிப்­ப­தற்கு பெண்­க­ளுக்கு ஈரான் அரசு அனு­மதி வழங்­கி­யது.

இந் நிலையில் பெரு­ம­ள­வி­லான பெண் கள் நுழைவுச் சீட்­டு­களைக் கொள்­வ­னவு செய்­துள்­ள­தாக அறி­விக்­கப்­ப­டு­கின்­றது.லையில் பெருமளவிலான பெண் கள் நுழைவுச் சீட்டுகளைக் கொள்வனவு செய்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!