வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 11: 1138 -சிரியாவில் பூகம்பத்தினால் 200,000 பேர் பலி

0 287

1138 : சிரியாவில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் சுமார் 200,000 பேர் உயிரிழந்தனர்.

1634 : டென்மார்க், மற்றும் ஜேர்மனியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் கொல்லப்பட்டனர்.

1138 : சிரியாவில் பூகம்பத்தினால் 200,000 பேர் பலி

1727: பிரித்தானிய மன்னராக 2 ஆம் ஜோர்ஜ் பதவியேற்றார்.

1811 : ஜோன் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த ஜூலியானா என்ற முதலாவது நீராவிப் படகுக் கப்பலின் சேவை அமெரிக்காவின் நியூயோர்க்குக்கும் நியூஜேர்ஸிக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.

1852 : அவுஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1865 : ஜமைக்காவில் நூற்றுக்கும் அதிகமான கறுப்பின மக்கள் அரசுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இது அன்றைய பிரித்தானிய அரசால் நசுக்கப்பட்டதில் நானூற்றுக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

1899 : இரண்டாவது போவர் போர் தென் ஆபிரிக்காவில் ஐக்கிய இராச்சியத்துக்கு எதிராக ஆரம்பமானது.

1941: மெசிடோனிய தேசிய விடுதலைப் போர் ஆரம்பமாகியது.

1910: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் விமானத்தில் பறந்தார். அமெரிக்காவில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் விமானத்தில் பறந்தமை இதுவே முதல் தடவையாகும்.

1944 : துவீனிய மக்கள் குடியரசு சோவியத் ஒன்றியத்துடன் இணைந்தது.

1954 : வட வியட்நாமை வியட் மின் படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.

1958 : நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே; இரண்டு நாட்களில் மீண்டும பூமியில் வீழ்ந்து எரிந்தது.

1987: யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்காகஇ இந்திய இராணுவத்தின் நடவடிக்கை ஆரம்பமாகியது.

1968 : நாசா முதற் தடவையாக மூன்று விண்வெளி வீரர்களை அப்பலோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.

1984 : சலேஞ்சர் விண்ணோடத்தில் சென்ற கத்ரின் சலிவன்இ விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

1987: யாழ்ப்பாணத்தை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றுவதற்காக இந்திய இராணுவத்தின் ஒபரேஷன் பவான் தாக்குதல் ஆரம்பமாகியது.

1998 : கொங்கோவில் ஹொலிகொப்டர் ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

2002 : பின்லாந்தில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!