(வீடியோ) இந்தோனேஷிய பாதுகாப்பு அமைச்சர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம்: யுவதியும் இளைஞனும் கைது!

Suspected IS radical stabs Indonesian security minister Wiranto

0 1,264

இந்தோனேஷியாவின் பாதுகாப்பு அமைச்சர் விரான்டோவை நபர் ஒருவர் இன்று கத்தியால் குத்தி படு காயப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் விரான்டோ

ஜாவா தீவிலுள்ள பாண்டேகிளாங் நகரில் வாகனமொன்றிலிருந்து அமைச்சர் விரான்டோ இறங்கும் போது அவரை நெருங்கிய நபர் ஒருவர் கத்தியால் குத்தினார்.

இதனால், அமைச்சர் விரான்டோவின் வயிற்றிலும் கழுத்திலும் இரு ஆழமான காயங்கள் ஏற்பட்டு;ளளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ்ஸுட்ன தொடர்படைய பயங்கரவாத வலையமைப்பைச் சேர்ந்த ஒருவராலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய புலனாய்வுத் துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்

அமைச்சர் விரான்டோவை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஹெலிகொப்டரைர நோக்கி தூக்கிச் சென்றபோது....


இச்சம்பவத்தில் பொலிஸ் உயர் அதிகாரி உட்பட மேலும் மூவரும் காயமடைந்துள்ளனர்.

72 வயதான பாதுகாப்பு அமைச்சர் விராண்டோ ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தின் பின் அவர் ஹெலிகொப்டர் மூலம் ஜகார்த்தா நகர வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு சத்திரகிசிச்சைக்ள தேவைப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஓர் இளைஞனையும் யுவதியையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!