மாவனெல்ல – ஹெம்மாத்தகம வீதியில் மண்மேடு சரியும் அபாயம்!

0 300

மாவனெல்ல – ஹெம்மாத்தகம (B– 279) வீதியில் மண் மேடு சரிந்து விழக்கூடிய ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவ்வீதியை பயன்படுத்துவோர் அவதானமாக  இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

மழையின் காரணமாக குறித்த வீதியில் கற்கள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இரவு வேளைகளில் இவ்வீதியை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் வாகன சாரதிகள் இதற்கு மாற்று வீதியாக பேராதனை வழியாக  கண்டி கொழும்பு (AA1) பிரதான வீதியை உபயோகிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!