எத்தியோப்பிய பிரதமர் அபீ அஹமட்டுக்கு நோபல் சமாதானப் பரிசு

2019 Nobel Peace Prize awarded to Ethiopian Prime Minister Abiy Ahmed Ali

0 1,102

2019 ஆம் ஆண்டின் நோபல் சமாதானப் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபீ அஹமட்டுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவுக்கும் அயல் நாடான எரித்திரியாவுக்கும் இடையில் கடந்த வருடம் சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

1998 முதல் 2000 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற இரு நாடுகளுக்கும் இடையிலான யுத்தத்தைத் தொடர்ந்து சுமார் 20 வருடங்களாக நீடித்த இராணுவ முறுகல் நிலையை முடிவுக்குக் கொண்டுவர இந்த சமாதான ஒப்பந்தம் உதவியது.

இந்நிiலுயில் சமாதானத்துக்கும் சர்வதேச ஒத்துழைப்புக்கும் ஆற்றிய பங்களிப்புகளுக்காக எத்தியோப்பிய பிரதமர் அபீ அஹமட்டுக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!