துபாயில் இம்மாதம் இசை நிகழ்ச்சி நடத்தும் அமெரிக்கப் பாடகி மரியா கெறி

0 198

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பிர­பல பாடகி மரியா கெறி, இம்­மாதம் துபாயில் இசை நிகழ்ச்சி நடத்­த­வுள்ளார்.

துபாய் எக்ஸ்போ 2020 எனும் சர்­வ­தேச கண்­காட்சி ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் துபாயில் 2020 ஒக்­டோபர் 20 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இக்­கண்­காட்­சியின் 365 நாட்கள் ‘கவுன்ட் டவுன்’ ஆரம்­ப­மா­கு­வதை குறிக்கும் வகையில் இம்­மாதம் 20 ஆம் திகதி இசை நிகழ்ச்சி நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

இதில் பாடகி மரியா கெறியும் கலந்­து­கொண்டு இசை நிகழ்ச்சி நடத்­த­வுள்ளார்.

துபாயின் புர்ஜ் கலீபா கட்­ட­டத்தை பின்­ன­ணி­யாகக் கொண்ட புர்ஜ் பார்க்கில் எதிர்­வரும் 20 ஆம் திகதி இரவு 8.20 (20:20) மணிக்கு இந்த இசை நிகழ்ச்சி ஆரம்­ப­மாகும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸை சேர்ந்த பிர­பல பாடகர் ஹுசைன் அல் ஜெஸ்­மியும் மரியா கெறி­யுடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்­துவார்.

இந்­நிகழ்ச்சிக்கு பார்­வை­யா­ளர்கள் இல­வ­ச­மாக அனு­ம­திக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

ஆனால், இதற்கு platinumlist.net எனும் இணை­யத்­த­ளத்தின் மூலம் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!