மின்சார உயரழுத்தக் கம்பிகளின் ஈர்ப்புப் புலத்துக்கு இரையாகும் உயிர்களும் செயலிழக்கும் அவயவங்களும் -டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம்

0 893

மின்­சா­ரத்­தினால் பாதிக்­கப்­படும் பலர் உட­ன­டி­யாக உயி­ரி­ழப்­ப­துடன் பலரின் அவ­யவங்­கள் ­செ­ய­லற்றுப் போவ­த­னையும் நாம் அறிந்­துள்ளோம்.

நமது இதயம் மில்லி வோல்ட் (mv) மின்­ன­ழுத்­தத்­தினால் இயங்கி வரு­கின்­றது.

மின் உப­க­ர­ணங்கள் அதன் மின்­ன­ழுத்­தத்தை விட உய­ர­ழுத்தம் வரும்­போது எரிந்து விடு­கின்­றது.   

அதே­போ­லவே நமது உடம்பும் எரிந்து விடு­கி­றது. 

உயர் மின்­ன­ழுத்தம் பலரின் உடலைச் சாம்­ப­ராக்கி உயி­ரி­ழப்பை ஏற்­ப­டுத்­து­வ­துடன் இதனால் பாதிக்­கப்­படும் பலர் கைக­ளையும் கால்­க­ளையும் இழந்து அங்­க­வீ­ன­மு­று­வ­த­னையும் நம்மால் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

அண்­மையில் கல்­முனை அஷ்ரப் ஞாப­கார்த்த வைத்­தி­ய­சா­லையில் மின்சாரத் தாக்­கு­த­லுக்கு இலக்­கான 19 வய­து­டைய இளைஞர் ஒருவர் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார்.அவர் மின்­சாரத் தாக்­கு­த­லினால் இரண்டு விரல்­களை இழந்­துள்ளார்.

மேலும் மற்­றொரு 22 வய­து­டைய இளை­ஞரின் ஒரு கையும் காலும் கரு­கிய நிலையில் அவற்­றி­லி­ருந்து வெளி­யே­றிய நச்­சுப்­ப­தார்த்­தங்களினால் இத­யமும் சிறுநீர­கமும் பாதிக்­கப்­பட்டார். இவ்­வாறு மின்­சார தாக்­கு­தலில் உயிர் பிழைத்தும் கை, கால்கள் எரிந்து அவற்றை நீக்கும் சந்­தர்ப்­பத்தின் போது மனக் கவலை ஏற்­ப­டு­கின்­றது.  நமது வீடு­க­ளுக்கு 240V உம் வீதி­களில் அதி­க­ள­வாக 33000 V மின்­சார அழுத்­தங்கள் காணப்­ப­டு­கின்­றன.

வாழ்க்கைச் செலவு உச்சம் கொண்­டி­ருக்கும் இக்­கா­ல­கட்­டத்தில் தொழி­லுக்­காக வேலை செய்யும் தொழி­லா­ளிகள் மின் தாக்­கு­த­லுக்கு இரை­யா­வது மற்றும் ஊன­மா­வது யாரு­டைய தவறு.

 உயர் மின்­ன­ழுத்தம் என்று ஒரே மட்­டத்தில் சமாந்­தர­மாக அதி உய­ரத்தில் காணப்­படும் மின் கம்­பி­களை அவ­தா­னிக்­காது அதற்கு மேலாக அரு­கா­மையில் கட்­ட­டங்­களை உயர்த்தும் வேளை­யி­லேயே மின் விபத்­துகள் ஏற்­ப­டு­கின்­றன.

உயர் மின்­ன­ழுத்தக் கம்­பிகள் நான்கு அடிக்கு அப்பால் காணப்­பட்­டாலும் அக்­கம்­பியைச் சூழ உரு­வாகும் காந்தப் புலத்­தினால் கவ­ரப்­ப­டு­வ­தா­லேயே இவ்­வி­பத்­துக்கள் பெரும்­பாலும் இடம்­பெ­று­கின்­றன.

மற்றும் வேலை உப­க­ர­ணங்கள் உயர் மின்­ன­ழுத்தக் கம்­பி­களில் தவ­று­த­லாகப் படு­வ­தாலும் விபத்­துகள் ஏற்­ப­டு­கின்­றன.

கட்­ட­டங்­களை நிர்­மா­ணிக்கும் போது Safety First யைக் கடைப்­பி­டிக்க வேண்டும். அத்­தோடு உள்­ளூ­ராட்சி சபை­க­ளி­ட­மி­ருந்து ( மாந­கர சபை, நக­ர­சபை, பிர­தேச சபை) அனு­ம­தியைப் பெற்ற பின்பே கட்­ட­டங்­களை நிர்­மா­ணிக்க வேண்டும். ஆனால் நாம் மேற்­கொள்ளும் குறுக்கு வழி­களால் பலர் பாதிக்­கப்ப­டு­கின்­றார்கள். 

இலங்கை மின்சாரசபையும் வீட்டு மின்கம்பிகளை கேபிள்களாக மாற்றி வரும் வேளையில் இவ்வாறான உயர் அழுத்தக் கம்பிகளுக்கு கொழும்புப் பிரதேசங்களில் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாடு பூராகவும் கொண்டுவந்து பல உயிர்களை மின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க முடியும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!