வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 14 : 2017-சோமாலியாவில் குண்டுத் தாக்குதலில் 587 பேர் பலி

0 358

1322 : ஸ்கொட்லாந்தின் முதலாம் ரொபேர்ட் புரூஸ், பைலாண்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வர்ட் மன்னனைத் தோற்கடித்தார். ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை எட்வர்ட் ஏற்றுக் கொண்டார்.

1994: பலஸ்தீன, இஸ்ரேலிய தலைவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது

1586 : ஸ்கொட்லாந்தின் அரசியான முதலாம் மேரி,  இங்கிலாந்தின் முதலாம் எலிஸபெத்துக்கு எதிராக சதி மேற்கொண்டதாக குற்றஞ் சாட்டப்பட்டார்.

1773 : பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் தேயிலைக் கப்பல் அமெரிக்காவின் மேரிலாந்தில் எரிக்கப்பட்டது.

1884: புகைப்பட பிலிமுக்கான காப்புரிமையை அமெரிக்காவின் ஜோர்ஜ் ஈஸ்ட்மன் பெற்றார்.

1888 : Roundhay Garden Scene என்ற முதலாவது அசையும் படத்தை லூயி லெ பிரின்ஸ் தயாரித்தார்.

1912 : முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தியோடோர் ரூஸ்வெல்ட், விஸ்கொன்சின் மாநிலத்தின் மில்வாக்கி நகரில் வைத்து சுடப்பட்டு காயமடைந்தார்.

1913 : ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 439 பேர் கொல்லப்பட்டனர்.

1939 : இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியக் கடற்படையினரின் “ரோயல் ஓக்” எனும் போர்க்கப்பலை ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது. இதனால் 800 பேர் கொல்லப்பட்டனர்.

1943 : போலந்தில் நாஸிகளின் “சோபிபோர்” வதைமுகாமில் இருந்த 600 கைதிகள் கிளர்ச்சியை மேற்கொண்டதில் 11 நாஸிகள் கொல்லப்பட்டனர். முன்னூறுக்கும் அதிகமான கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர்.

1948 : இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.

1956 : இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.

1962 : கியூபாவுக்கு மேல் பறந்த அமெரிக்க விமானமொன்று சோவியத் யூனியனின் அணுவாயுத ஏவுகணைகளைப் படம் பிடித்தது.

1964 : லியோனிட் பிரெஷ்னெவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகவூம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகமுமாகவும் பதவியேற்றார். நிக்கிட்டா குருசேவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1964 : ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங், சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1968 : விண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.

1968: மெக்ஸிகோவில் நடந்த ஒலிம்பிக் விழாவின் 100 மீற்றர் போட்டியில் அமெரிக்காவின் ஹிம் ஸைன்ஸ் 9.95 விநாடிகளில் ஓடி சாதனை படைத்தார். 10 விநாடிகளுக்குள் இத்தூரத்தை ஓடி முடித்த முதல் நபர் இவராவார்.

1973 : தாய்லாந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டதில் 77 பேர் கொல்லப்பட்டு 857 பேர் காயமடைந்தனர்.

1981: எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, உப ஜனாதிபதியான ஹொஸ்னி முபாரக்,  ஜனாதிபதியாக பதவியேற்றார்.

1982: போதைப்பொருட்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ரீகன் போர்ப்பிரகடனம் செய்தார்.

1987 : அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஜெசிக்கா என்ற 18-மாதக் குழந்தை கிணறு ஒன்றில் வீழ்ந்தது. 58 மணி நேரத்தின் பின்னர் இது உயிருடன் மீட்கப்பட்டது. இந்த மீட்புப் போராட்டம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.

2017 : சோமாலியாவில் குண்டுத் தாக்குதலில் 587 பேர் பலி

1994: பலஸ்தீன தலைவர் யஸீர் அரபாத், இஸ்ரேலிய பிரதமர் யிட்சாக் ரொபின்,  இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சிமோன் பெரஸ் ஆகியோருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது.

2012: ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெலிக்ஸ் போம்கார்ட்னர் 39,068 மீற்றர் உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் முறையில் குதித்து உலக சாதனை படைத்தார்.

2014: நோபளத்தில் இமாலய மலைப்பகுதிகளில் பனிச்சரிவில் சிக்கி 43 பேர் உயிரிழந்தனர்.

2017: சோமாலியாவின் தலைநகர் மொகாடிஸஷுவில் நடந்த வாகன குண்டுத் தாக்குதல்களில் 587 பேர் பலியானதுடன் 316 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!