கட்டலோனியாவில் சுதந்திரத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்திய பிராந்தியத்தின் முன்னாள் அரசியல் தலைவர்களுக்கு ஸ்பானிய நீதிமன்றத்தால் நீண்ட கால சிறைத்தண்டனைகள்!முன்னாள் ஜனாதிபதிக்கு பிடிவிறாந்து

Spain jails Catalan leaders up to 13 years for independence bid

0 93

ஸ்பெய்னின் கட்­ட­லோ­னியா பிராந்­தி­யத்தை தனி நாடாக்­கு­வ­தற்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­திய அப்­பி­ராந்­தி­யத்தின் தலை­வர்கள் 9 பேருக்கு ஸ்பெய்ன் உயர் நீதி­மன்றம் 9 முதல் 13 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை விதித்து நேற்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

கட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி கார்ல்ஸ் புய்ஜ்மன்ட்.

 சிறைத்­தண்­டனை விதிக்கப்பட்டவர்­களில் பெரும்­பா­லானோர் கட்ட லோனியா பிராந்­திய அர­சாங்­கத்தின் முன்னாள் அங்­கத்­த­வர்கள் ஆவர்.பார்­சி­லோ­னாவைத் தலை­ந­க­ராகக் கொண்ட கட்­ட­லோ­னியா பிராந்­தி­யத்தை தனி­யான நாடாக்­கு­வ­தற்கு அப்­பி­ராந்­தி­யத்திலுள்ள பலர் முயற்­சிக்­கின்­றனர்.

பார்சிலோனாவில் ஆர்ப்பாட்டம்

 

கட்­ட­லோ­னியா தனி நாடாக பிரிந்து செல்­வது தொடர்­பாக தடை­யுத்­த­ர­வையும் மீறி, கட்­ட­லோ­னியா பிராந்­திய அரசின் ஏற்­பாட்டில் 2017 ஒக்­டோபர் முதலாம் திகதி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. இதற்­கா­கவே அர­சியல் தலை­வர்­க­ளுக்கு சிறைத்;தண்­ட­னைகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

நீதிமன்றத்தில் நேற்று பிரதிவாதிகள்

 

கட்­ட­லோ­னி­யாவின் முன்னாள் உப ஜனா­தி­பதி, பிராந்­திய சட்­ட­மன்ற சபா­நா­யகர் உட்­பட 12 பேர் மீது தேசத் துரோக குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்டு வழக்குத் தொடுக்­கப்­பட்­டி­ருந்­தது. மேற்­படி 12 பேரும் குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரித்­தனர்.

கட்­ட­லோ­னியா பிராந்­திய முன்னாள் உப ஜனா­தி­பதி ஓரியல் ஜன்­க­ரெ­ஸுக்கு 25 வருட தண்­டனை விதிக்­கப்­பட வேண்டும் என அரச தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் கோரினர். எனினும் 13 வருட தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அவரின் அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளாக பதவி வகித்த மூவ­ருக்கு தலா 12 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. கட்­ட­லோ­னி­யாவின் முன்னாள் சபா­நா­ய­க­ருக்கு 11 வரு­டங்கள் மற்றும் 6 மாத சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. மேற்­படி 12 பேரில் மூவ­ர் மாத்­திரம் சிறைத்­தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பினர். அவர்கள் மூவ­ருக்கும் அப­ராதம் விதிக்­கப்­பட்­டது.

முன்னாள் ஜனா­தி­ப­திக்கு மீண்டும் பிடி­வி­றாந்துகட்­ட­லோ­னி­யாவின் முன்னாள் ஜனா­தி­பதி கார்ல்ஸ் புய்ஜ்மன்ட், வழக்கு விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக பெல்­ஜி­யத்­துக்கு தப்பிச் சென்­றி­ருந்தார்.

இந்­நி­லையில், அவரை கைது செய்­யு­மாறு ஸ்பானிய உயர் நீதி­மன்றம் நேற்று மீண்டும் பிடி­வி­றாந்து பிறப்­பித்­தது.

பார்­சி­லோ­னாவில் ஆர்ப்­பாட்­டங்கள்மேற்­படி தீர்ப்­பு­க­ளை­ய­டுத்து கட்­ட­லோ­னியா தலை­நகர் பார்­சி­லோ­னாவில் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. மாணவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!