பொது உடன்பாட்டில் 5 தமிழ்த் கட்சிகள் ஒப்பம்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியேறியது

0 333

                                                                                                         (தி.சோபிதன்)
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 13 கோரிக்கைகள் கொண்ட பொது உடன்பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய ஐந்து கட்சிகளும்  இன்று (14)  கையொப்பமிட்டன. ஏற்பாட்டாளர்களுடன் முரண்பட்டுக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டத்திலிருந்து வெளியேறியது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடு ஒன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, கட்சிகளின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்ட 13 கோரிக்கை கொண்ட ஆவணத்திலேயே 5 தமிழ்க் கட்சிகள்  யாழில் கைச்சாத்திட்டன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!