மெக்ஸிகோ பொலிஸார் 14 பேர், போதைப்பொருள் கடத்தல் குழுவினால் சுட்டுக்கொலை!

14 police dead in Mexico gun ambush

0 770

மெக்ஸிகோவில் 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பலம் வாய்ந்த போதைப்பொருள் கடத்தல் குழுக்களில் ஒன்றான ஜெலிஸ்கோ நுவே ஜெனரிசியன் கார்ட்டல் (the Jalisco Nueva Generación Cartel) எனும் குழுவினால் இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

மிச்சோவாகேன் மாநிலத்தின் எல் அகுவாஜே நகரில் திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்ற உத்தரவொன்றை நிறைவேற்றுவதற்காக பொலிஸார் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் வாகனத் தொடரணியை பிக் அப் வாகனங்களில் வந்த ஆயுதபாணிகள் சுற்றிவளைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன் வாகனங்களையும் தீக்கிரையாக்கினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 14 பொலிஸ் உத்தியோத்தர்கள் பலியானதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!