அகில இலங்கை பாடசாலைகள் பெண்கள் கபடி போட்டி: கிளிநொச்சி இந்து வித்தியாலயத்துக்கு தங்கப் பதக்கம் இந்து வித்தியாலயத்தின் நிதுஷா சிறந்த வீராங்கனை

0 180

(நெவில் அன்­தனி)

கல்வி அமைச்சும் கல்வி அமைச்சின் விளை­யாட்­டுத்­துறைப் பிரிவும் இணைந்து ஏற்­பாடு செய்­துள்ள அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழாவில் ஓர் அம்­ச­மான கபடி போட்­டியில் பெண்கள் பிரிவில் கிளி­நொச்சி இந்து வித்தியாலயத்துக்கு தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்­தது.

குரு­நாகல் மலி­ய­தேவ கல்­லூரி மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற 20 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான கபடி போட்­டி­களில் தங்கம், வெள்ளி, வெண்­கலப் பதக்­கங்­களை வடக்கு மற்றும் கிழக்கு பாட­சா­லைகள் வென்­றமை விசேட அம்­ச­மாகும்.

அத்­துடன் 20 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான கபடி போட்­டியில் அதி சிறந்த வீராங்­க­னை­யாக கிளி­நொச்சி இந்து மகா வித்­தி­யா­லய மாணவி வி. நிதுஷா தெரிவானார்.

இறுதிப் போட்­டியில் நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்­தா­டிய கிளி­நொச்சி இந்து மகா வித்­தி­யா­லய அணி 44–18 என்ற புள்­ளிகள் கணக்கில் வெற்­றி­பெற்­றது.

இதன் பிர­காரம் கிளி­நொச்சி இந்து மகா வித்­தி­யா­லயம் தங்கப் பதக்­கத்­தையும் நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி வெள்ளிப் பதக்­கத்­தையும் வென்­றன.

2015இல் வெள்ளிப் பதக்­கத்­தையும் 2017இல் வெண்­கலப் பதக்­கத்­தையும் வென்ற கிளி­நொச்சி இந்து மகா வித்­தி­யா­லயம் தங்கப் பதக்கம் வென்­றமை இதுவே முதல் தட­வை­யாகும்.

மூன்றாம் இடத்தைப் பெற்ற மட்­டக்­க­ளப்பு கிராண் மத்­திய கல்­லூ­ரிக்கு வெண்­கலப் பதக்கம் கிடைத்­த­துடன் நான்காம் இடத்தை பளு­காமம் கண்­ட­மணி வித்­தி­யா­லயம் பெற்­றது.

17 வதுக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான கபடி போட்­டியில் கிளி­நொச்சி சிவ­நகர் வித்­தி­யா­லயம் வெள்ளிப் பதக்­கத்­தையும் பருத்­தித்­துறை சென் தோமஸ் கல:லூரி வெண்­கலப் பதக்கத்தையும் வென்றன.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கபடி போட்டியில் நெல்லியடிய மகா வித்தியாலயம் வெண்கலப் பதக்கத்தை வென்றது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!