ஜப்பானில் ஹகிபிஸ் சூறாவளியினால் 56 பேர் பலி!

0 33

ஜப்­பானில் ஹகிபிஸ் சூறா­வ­ளி­யினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 56 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

ஹகிபிஸ் சூறாவளி கடந்த சனிக்­கி­ழமை கடு­மை­யாக தாக்­கி­யது. ஜப்­பா­னி­லுள்ள 47 பிராந்­தி­யங்­களில் 36 பிராந்­தி­யங்­களில் கடந்த 60 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு பலத்த காற்­றுடன் கடும் மழை பெய்­தது. இதனால் வெள்ளப் பெருக்கும் மண்­ச­ரி­வு­களும் ஏற்­பட்­டன.

இச்­சூ­றா­வ­ளி­யினால் 56 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் மேலும் 15 பேரை காண­வில்லை என ஜப்­பானின் தேசிய அலை­வ­ரி­சை­யான என்.எச்.கே. கடந்த திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தது. மேலும் சுமார் 200 பேர் காய­ம­டைந்­துள்­ளனர் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மீட்பு நட­வ­டிக்­கை­களில் ஜப்பானிய துருப்­புகள் 31,000 பேர் உட்­பட சுமார் ஒரு இலட்சம் பேர் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளனர்.

இச்­சூ­றா­வளி தாக்­கி­யதால் சுமார் 376,000 வீடு­களில் மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்டும், 14 ஆயிரம் வீடு­களில் போதிய தண்ணீர் வசதி இல்­லாமலும் இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. நூற்றுக்கணக்கான விமான சேவைகள் மற்றும் ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!