மகளிர் மரதன் ஓட்டத்தில் ப்றிஜிட் உலக சாதனை

0 112

பிரித்­தா­னி­யாவின் பாவுலா ரெட்க்­ளிவ்­வுக்கு 16 வரு­டங்­க­ளாக இருந்து மகளிர் மரதன் ஓட்டப் போட்­டிக்­கான உலக சாத­னையை கென்­யாவின் ப்றிஜிட் கொஸ்கேய் முறி­ய­டித்து புதிய உலக சாதனை நிலை­நாட்­டி­யுள்ளார்.

ஞாயி­றன்று நடை­பெற்ற சிக்­காகோ மரதன் ஓட்டப் போட்­டியை 2 மணித்­தி­யா­லங்கள், 14 நிமி­டங்கள், 04 செக்­கன்­களில் நிறைவு செய்து புதிய உலக சாதனை நிலை­நாட்­டிய ப்றிஜிட் கொஸ்கேய், கடந்த வருடம் ஈட்­டிய சிக்­காகோ சம்­பியன் பட்­டத்­தையும் தக்­க­வைத்­துக்­கொண்டார்.

லண்டன் மரதன் 2003 போட்­டியில் பாவுலா ரெட்க்ளிவ் நிலை­நாட்­டி­யி­ருந்தது 2 மணித்­தி­யா­லங்கள், 15 நிமி­டங்கள், 25 செக்­கன்கள் என்ற சாத­னை­யை­விட 49 செக்­கன்கள் குறை­வாகப் பதி­வு­செய்தே ப்றிஜிட் புதிய உலக சாத­னையை நிலை­நாட்­டினார்.

இப் போட்­டியில் எதி­யோப்­பி­யாவின் அபாபெல் யேஷானே 6 நிமி­டங்கள், 47 செக்­கன்கள் வித்­தி­யா­சத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். மற்­றொரு எதி­யோப்­பி­ய­ரான ஜெலெட் புர்க்கா (2 மணி. 20 நி. 51 செக்.) மூன்றாம் இடத்தைப் பெற்றார்.

மேலும் மரதன் ஓட்டப் போட்­டியில் பங்­கு­பற்­றிய ஆண்­களில் 22 போர் மாத்­தி­ரமே ப்றிஜிட்டை முந்திச் சென்­றி­ருந்­தனர். ஆண்­க­ளுக்­கான சிக்­காகோ மரதன் ஓட்டப் போட்­டியில் கென்­யாவின் லோரன்ஸ் செரோனோ (2 மணி. 05 நி. 45 செக்.) முதலாம் இடத்தைப் பெற்றார்.

எதி­யோப்­பி­யர்­க­ளான டெஜின் டிபேலா (2 மணி. 05 நி. 46 செக்.), அசேபா மெங்ஸ்டு (2 மணி. 05 நி. 48 செக்.) ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!