அகில இலங்கை பாடசாலைகள் கூடைப்பாட்டம்: கொழும்பு, இராஜகிரிய, நுகேகொடை பாடசாலைகளுக்கு தங்கப் பதக்கங்கள்

0 83

கல்வி அமைச்சும் கல்வி அமைச்சின் விளை­யாட்­டுத்­துறைப் பிரிவும் ஏற்­பாடு செய்­துள்ள இவ் வரு­டத்­துக்­கான அகில இலங்கை பாடசாலைகள் விளை­யாட்டு விழாவில் 17 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கூடைப்­பந்­தாட்டப் போட்­டியில் மரு­தானை புனித சூசை­யப்பர் கல்­லூ­ரியும் 20 வய­துக்­குட்­பட்ட ஆண்கள் பிரிவில் இரா­ஜ­கி­ரிய கேட்வே சர்­வ­தேச கல்­லூ­ரியும் தங்கப் பதக்­கங்­களை சுவீ­க­ரித்­தன.

பம்­ப­லப்­பட்டி திருக்­கு­டும்ப கன்­னி­யாஸ்­தி­ரிகள் மட பாட­சாலை

 

இறுதிப் போட்­டிகள் குரு­நா­கலில் நேற்று நடை­பெற்­றன. பெண்­க­ளுக்­கான 17 வய­துக்­குட்­பட்ட பிரிவில் பம்­ப­லப்­பட்டி திருக்­கு­டும்ப கன்­னி­யாஸ்­தி­ரிகள் மட பாட­சாலை அணியும், 20 வய­துக்­குட்­பட்ட பிரிவில் நுகே­கொடை புனித சூசை­யப்பர் மகளிர் கல்­லூ­ரியும் தங்கப் பதக்­கங்­களை வென்­றெ­டுத்­தன.

நுகே­கொடை புனித சூசை­யப்பர் மகளிர் கல்­லூ­ரி

 

ஆண்­க­ளுக்­கான 17 வய­துக்­குட்­பட்ட இறுதிப் போட்­டியில் குரு­நாகல் புனித ஆனாள் கல்­லூ­ரியை சந்­தித்த புனித சூசை­யப்பர் கல்­லூரி 62 – 33 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்­தது.
இப் பிரிவில் நுகே­கொடை லைசியம் வெண்­கலப் பதக்­கத்தைப் பெற்­றது.

20 வய­துக்­குட்­பட்ட இறுதிப் போட்­டியில் நீர்­கொ­ழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்­லூ­ரியை 67 – 64 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்ட இரா­ஜ­கி­ரிய கேட்வே சர்­வ­தேச பாட­சாலை தங்கப் பதக்­கத்தை தன­தாக்­கி­யது.
மாரிஸ் ஸ்டெல்­லா­வுக்கு வெள்­ளியும், கொழும்பு றோயல் கல்­லூ­ரிக்கு வெண்­க­லமும் கிடைத்­தன.

இரா­ஜ­கி­ரிய கேட்வே சர்­வ­தேச கல்­லூ­ரி

 

பெண்­க­ளுக்­கான 17 வய­துக்­குட்­பட்ட இறுதிப் போட்­டியில் கண்டி மஹா­மாயா பெண்கள் பாட­சா­லையை சந்­தித்த பம்­ப­லப்­பிட்டி திருக்­கு­டும்ப கன்­னி­யாஸ்­தி­ரிகள் மடப் பாட­சாலை அணி 54 – 21 என வெற்­றி­பெற்று தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்­தது. மஹா­மா­யா­வுக்கு வெள்­ளியும் கொழும்பு சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க பெண்கள் பாட­சா­லைக்கு வெண்­க­லமும் கிடைத்­தன.

20 வய­துக்­குட்­பட்ட இறுதிப் போட்­டியில் பம்­ப­லப்­பிட்டி திருக்­கு­டும்ப கன்­னி­யாஸ்­தி­ரிகள் மட பாட­சா­லையை
62 – 33 என வெற்­றி­கொண்ட நுகே­கொடை புனித சூசை­யப்பர் பெண்கள் பாடசாலை தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.

திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மட பாடசாலைக்கு வெள்ளியும் தெஹிவளை ப்ரெஸ்பெட்டேரியன் சர்வதேச பாடசாலைக்கு வெண்கலமும் கிடைத்தன. (என்.வீ.ஏ.)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!