மகளிர் டென்னிஸ் சங்க சம்பியன் பட்டத்தை குறைந்த வயதில் வென்று சாதித்தார் கோகோ

0 75

ஆஸ்­தி­ரி­யாவில் நடை­பெற்ற லின்ஸ் பகி­ரங்க டென்னிஸ் போட்­டியின் மகளிர் ஒற்­றையர் இறுதி ஆட்­டத்தில் ஜெலினா ஒஸ்­டா­பென்­கோவை வெற்­றி­கொண்ட அமெ­ரிக்­காவின் கோகோ கோவ், முதல்­த­ட­வை­யாக மகளிர் டென்னிஸ் சங்க சம்­பியன் பட்­டத்தை வென்றார்.

அத்­துடன் மிக இள­வ­யதில் மகளிர் டென்னிஸ் சங்க சம்­பியன் பட்­டத்தை வென்­றவர் என்ற சாத­னை­யையும் பதி­னைந்தே வய­தான கோகோ கோவ் படைத்தார்.

லெட்­வியா வீராங்­கனை ஜெலி­னாவை 6–3, 1–6, 6–2 என்ற புள்­ளி­களைக் கொண்ட 2 – 1 என்ற செட்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­யீட்டி சம்­பி­ய­னான கோகோ, மகளிர் டென்னிஸ் தர­வ­ரி­சையில் முதல் 75 இடங்­க­ளுக்குள் தனது பெயரை பதித்­துள்ளார்.

‘இந்த வெற்றி என்னை பெரு­மி­தத்தில் ஆழ்த்­து­கின்­றது. மீண்டும் இங்கு வந்து விளை­யாட விரும்­பு­ வ­துடன் இந்த வெற்­றியை என் வாழ்நாள் முழு­வதும் நினைவில் வைத்­தி­ருப்பேன்’ என கோகோ கோவ் தெரி­வித்தார்.

விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டி­களில் ஐந்து தட­வைகள் சம்­பி­ய­னான வீனஸ் வில்­லி­யம்ஸை முத­லா­வது சுற்றில் எதிர்­பா­ராத வகையில் வெற்­றி­கொண்ட கோகோ, 2004இல் டாஷ்கென்ட் போட்­டி­களில் 15 வயதில் சம்­பி­ய­னான நிக்கலி வடிசோவைவிட குறைந்த வயதில் சம்பியனானவர் என்ற பெருமைக்கு உரித்தானார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!