மீண்டும் திகில் படத்தில் நடிக்கும் ஹன்சிகா

0 119

நடிகை ஹன்சிகா மீண்டும் ஒரு பேய் படத்திலும் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துடன் இணைந்து நடிக்கிறார் ஹன்சிகா.

அந்த படத்தில் ஸ்ரீசாந்த் வில்லனாக நடிக்க இருக்கி­றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  இது வரை சினிமாவில் சில ஹீரோயின்கள் மட்டுமே 50 படங்களை தாண்டி நடித்துள்­ளனர். அந்த வரிசையில் தற்பொழுது நடிகை ஹன்சிகாவும் இணைகிறார்.

தளபதி விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி கதாநாயகர்களுடன் பணியாற்றியவர் ஹன்சிகா.

சமீப காலமாக தமிழ் சினிமா கதாநாயகிகள், தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க தொடங்கிவிட்டனர்.

இதை முதலில் ஆரம்பித்து வைத்தவர் நயன்தாரா.

அதை பின்பற்றி தொடர்ந்து த்ரிஷாவும் தன்னை முன்னிலைப்­படுத்தும் கதைகளில் நடிக்கத் தொடங்­­கினார்.

அந்த வரிசையில் தற்போது நடிகை ஹன்சிகா­வும் இண­ைந்து­விட்டார்.

புதிய படங்க­ளில் நடிக்க, தன்னை அணு­கும் இயக்குநர்க­ளிடம், நாயகிக்கு முக்கியத்து­வம் அளிக்கும் கதைகளையே கேட்டு வந்தார்.

தற்போது அப்படி ஒரு கதையை கேட்டு ஓகே செய்து நடிக்க முன்வந்துள்ளார் ஹன்சிகா.

இது வழக்கம்போல் ஒரு திகில் கொமடி படமாக உருவாகிறது.

இந்த படத்தை இயக்க உள்ளனர் ஹரி சங்கர் மற்றும் ஹரீஸ் நாராயணன்.

இவர்கள் இருவரும் இதற்கு முன் ‘அம்புலி’ 3டி படத்தை இயக்கி இருந்தனர். அதற்கு பின் இவர்கள் இருவரும் இணைந்து இயக்கிய ‘ஆ படம் தோல்வி அடைந்தது.

இதன் பின் இவர்கள் இணைந்து இந்த படத்தை இயக்க உள்ளனர்.

இந்த படத்தில் ஹன்சிகா உடன் சனம் செட்டி மற்றும் பார்த்திபன் ஆகியோர் நடிக்க உள்ளார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!