பிரித்தானிய இளவரசர் வில்லியம், இளவரசி கேட் பாகிஸ்தானுக்கு விஜயம்

0 1,211

 

பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியம், அவரின் மனைவியான (கேம்பிரிட்ஜ் சீமாட்டி) இளவரசி கேட் மெடில்டன் ஆகியோர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளனர்.

 

இவர்கள் நேற்றிரவு பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரிலுள்ள நூர் கான் விமானப்படைத் தளத்தில் சென்றிறங்கினர்.

இவர்களை பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியும் அவரின் மனைவியும்  வரவேற்றனர்.

பாகிஸ்தானின் ஜனாதிபதி கலாநிதி ஆரிவ் அல்வி, அவரின் மனைவி சமீனா ஆரிவ், பிரதமர் இம்ரான் கான் ஆகியோரையும் இளவரசர் வில்லியமும் இளவரசர் கேட் மிடில்டனையும் சந்தித்தனர்.

இளவரசர் வில்லியம், இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

2006ஆம் ஆண்டு  இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரின் மனைவி கமீலா ஆகியோர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த பின்னர் பிரித்தானிய அரச குடும்பத்தினர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதும் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!