வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 16 : 2012- மத்தளையில் முதலாவது விமானம் தரையிறங்கியது

0 754

1775 : ஐக்கிய அமெரிக்காவில் மேய்ன் மாநிலத்தின் போர்ட்லண்ட் நகரம் பிரித்தானியரால் எரிக்கப்பட்டது.

1793 : பிரெஞ்சுப் புரட்சியின்போது, பிரான்ஸின் பதினாறாம் லூயி மன்னனின் மனைவி மேரீ அண்டொனெட் கழுத்து வெட்டி மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

1799 : பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீர பாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர்.

1951: பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் சுட்டுக்கொல்லப்பட்டார்

1813 : ஆறாவது கூட்டணி நாடுகள் நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.

1834 : லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மையான பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.

1905 : எஸ்தோனியாவில் மக்கள் மீது ரஷ்ய இராணுவம் சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.

1905 : பிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.

1934 : குவோமின்டாங்குகளுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்டுக்களின் தாக்குதல் ஆரம்பமானது.

1939 : இரண்டாம் உலகப் போரில் பிரித்தானியா மீதான ஜேர்மனிய வான்படையின் முதலாவது தாக்குதல் இடம்பெற்றது.

1942 : பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.

1949 : கிரேக்க கம்யூனிஸ தலைவர் நிக்கலாஸ் சக்காரியாடிஸ் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தார். கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1951 : பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகத்; அலி கான் ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1964 : மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

1975 : கிழக்குத் திமோரில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐந்து பேர் இந்தோனேஷியப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1978: போலந்தை சேரந்த கரொல் வொஜ்திலா பரிசுத்தப் பாப்பரசராக தெரிவானார். இவர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் என்ற பெயருடன் பாப்பரசராக பதவியேற்றார்.

1984 : தென் ஆபிரிக்காவின் டெஸ்மண்ட் டுட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

1987 : தெற்கு இங்கிலாந்தில் இடம்பெற்ர சூறாவளியில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

1996 : குவாத்தமாலாவில் கால்பந்தாட்டப் போட்டி நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 84 பேர் கொல்லப்பட்டனர்.

2012: மத்தளையில் முதலாவது விமானம் தரையிறங்கியது

1998 : சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஆகஸ்டோ பினொச்செட் லண்டனில் கைது செய்யப்பட்டார்.

2006 : ஹபரணையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் இலங்கைக் கடற்படையினர் 102 பேர் கொல்லப்பட்டனர்.

2006 : இலங்கையில் 1987 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று இலங்கை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

2012: பாகிஸ்தானின் பீச் கிராவ்ட் சுப்பர் கிங் 200 ரக விமானமொன்று மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் சோதனையோட்டமாக தரையிறங்கியது. இவ் விமான நிலையத்தில் தரையிறங்கிய முதலாவது விமானம் இதுவாகும்.

2013: லாவோஸில் இடம்பெற்ற விமான விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!