குரல் கட்டளையினால்  கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்; ஏ.ரி.எம். இயந்திரமும் உள்ளது (வீடியோ)

Indian Man's Bike Works On Voice Commands, Has ATM

0 1,217

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் பரெல்லி நகரைச் சேர்ந்த 70 வயதான மொஹம்மத் சயீத் என்பவரே இந்த மோட்டார் சைக்கிளை இவ்வாறு மாற்றியமைத்துள்ளார்.

இந்த பைக் மொஹம்மத் சயீட்டின் குரல் கட்டளைக்கு பதிலளிக்கிறது மேலும் நாணயங்களை மினி ஏ.ரி.எம் வழியாக விநியோகிக்கவும் செய்கிறது.

மொஹம்மத் சயீத்  தன்னுடைய பைக்குக்கு டர்ஸன் எனப் பெயரிட்டுள்ளார். பைக்கின் வீடியோவை ஹனி சக்சேனா என்பவர் இணையத்தில் வெளியிட்டார்.  அதையடுத்து  சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி தளங்களில் வைரலாகியுள்ளது.

மொஹம்மத் சயீத் சுயமாக பயிற்சி பெற்ற எலக்ட்ரீஷியன், ஆவார். இவர் சாகசங்களை நடத்தும் ஸ்டண்ட் மேனாகவும் செயற்படுவதுடன் விற்பனையாளராகவும் தொழில்புரிகிறார்.

வீடியோ

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!