ஒலிம்பிக் தங்கத்தைக் குறிவைத்து போட்டியிட பெடரர் தீர்மானம்

0 154

ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வில டென்னிஸ் ஒற்­றையர் போட்­டியில் தங்கப் பதக்­கத்தை வென்­றெ­டுக்கும் குறிக்­கோ­ளுடன் டோக்­கியோ 2020 ஒலிம்பிக் போட்­டி­களில் பங்­கு­பற்­ற­வுள்­ளதை ரொஜர் பெடரர் உறு­தி­செய்­துள்ளார்.

ஆட­வ­ருக்­கான சர்­வ­தேச டென்னிஸ் அரங்கில் அதி­க­ள­வி­லான சம்­பியன் பட்­டங்­களை வென்­றவர் என்ற பெரு­மைக்­கு­ரிய 38 வய­தான ரொஜர் பெடரர், ஒலிம்பிக் ஒற்­றையர் பட்­டத்தை வென்­ற­தில்லை.

எட்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் லண்டன் 2012 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பிரித்­தா­னி­யாவின் அண்டி மறே­யிடம் தோல்வி அடைந்த ரொஜர் பெடரர் வெள்ளிப் பதக்­கத்­துடன் திருப்தி அடைய நேரிட்­டது.

எவ்­வா­றா­யினும் ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் மீண்டும் பங்­கு­பற்­ற­வேண்டும் என இப்­போது தீர்­மா­னித்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.

உபாதை கார­ண­மாக ரியோ 2016 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­றா­ம­லி­ருந்த ரொஜர் பெடரர், பெய்ஜிங் 2006 ஒலிம்பிக் விளை­யாட்டு விழா ஆடவர் இரட்­டையர் பிரிவில் ஸ்டான் வொரின்காவுடன் இணைந்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!