ஓ மை கடவுளே படத்தில் இணைந்தார் தெய்வமகள் வாணி போஜன்

0 118

அசோக் செல்வன் மற்றும் ரித்­திகா சிங் இணைந்து நடிக்கும் ஓ மை கட­வுளே திரைப்­ப­டத்தில் தற்­போது, சின்­னத்­திரை நாய­கி­யான வாணி போஜன் இணைந்­துள்­ள­தாக படக்­கு­ழு­வினர் தெரி­வித்­துள்­ளனர்.

 வாணி போஜன் தற்­போது தெலுங்கில் மீக்கு மாத்­ரமே செப்தா படத்தில் நடித்து வரு­கிறார். அந்த படத்­திற்கு பிறகு இப்­ப­டத்தில் நடிக்க ஒப்­பந்­தா­மா­கி­யுள்ளார்.

ராட்­சசன் பட தயா­ரிப்­பாளர் ஜி.டில்லி பாபு தயா­ரிப்பில், தற்­போது ஓ மை கட­வுளே எனும் படம் தயா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது.

அஷ்வத் மாரி­முத்து இயக்கும் படத்தில் அசோக் செல்வன் கதா­நா­ய­க­னாக நடிக்­கிறார் அவ­ருக்கு ஜோடி­யாக இறு­திச்­சுற்று நாயகி ரித்­திகா சிங் நடிக்­கிறார்.

ஓ மை கட­வுளே பட தயா­ரிப்பு நிறு­வ­ன­மான ஆக்ஸஸ், தற்­போது புது தக­வலை வெளியிட்­டுள்­ளது.

சன் ரீவியில் ஒளிப­ரப்­பான தெய்­வ­மகள் சீரியல் மூல­மாக அனைத்து தமிழ் குடும்­பத்­திலும் உறுப்­பி­ன­ராக இணைந்து விட்ட, ரசி­கர்­களால் சின்­னத்­திரை நயன்­தாரா என்று பிரி­ய­மாக அழைக்­கப்­படும் வாணி போஜன் இப்­ப­டத்தில் இணைந்­துள்ளார்.

வாணி போஜன் தற்­போது தொலைக்­காட்சித் தொடர்­களில் நடிப்­பதை முழு­வ­து­மாக நிறுத்தி விட்டு, முழு­வ­து­மாக சினி­மாவில் கவனம் செலுத்த தொடங்­கி­விட்டார்.

அவ்­வப்­போது பல்­வேறு சினிமா மற்றும் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களில் விருந்­தி­ன­ராக கலந்து கொண்ட வாணி போஜன், தெலுங்கில் மீக்கு மாத்­ரமே செப்தா என்ற திரைப்­ப­டத்தில் நடித்து வரு­கிறார்.

இந்த படத்­திற்கு பிறகு ஓ மை கட­வுளே படத்தில் நடிக்­க­வுள்ளார். 

மேலும், இப்­ப­டத்தில் பெல்லி சுப்லு பட இயக்­குநர் தருண் பாஸ்கர் படத்தின் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தில் நடிக்­கிறார்.

அதோடு முக்­கிய வேடங்­களில் அபினவ், நவீன் ஜார்ஜ் தாமஸ், அனு­ஷயா பரத்வாஜ், அவந்­திகா மிஸ்ரா ஆகியோர் நடிக்­கின்­றனர்.

இந்த படத்தை ஷமீர் சுல்தான இயக்குகிறார்.

சிவக்குமார் இசையமைக்கும் இப் படத் திற்கு மதன் குணதேவா ஒளிப்பதிவு செய்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!