‘த ஷாஷேங்க் ரிடெம்ப்ஷன்’ படம் அதன் பெயர் காரணமாக தோல்வியடைந்தது -நாயகன் டிம் ரொபின்ஸ் வேதனை

0 623

ஹொலிவுட் கிளாசிக் திரைப்­ப­டங்­களில் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் (Shawshank) ‘ஷாஷேங்க் ரிடெம்ப்ஷன்’ என்ற 1994ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்­படம் அதன் பெயர் கார­ண­மாக வசூல் ரீதி­யாக பெரிய ஹிட் ஆக­வில்லை என்று கூறி­யுள்ளார் அதில் நாய­க­னாக நடித்த டிம் ரொபின்ஸ்.

நாவ­லா­சி­ரியர் ஸ்டீபன் கிங் எழு­திய ‘Rita Hayworth and Shawshank Redemption’ என்ற நாவலை அடிப்­ப­டை­யாகக் கொண்ட கதைக்­க­ள­மாகும் இந்தப் படம். இப்­ப­டத்தின் திரைக்­க­தையை எழுதி இயக்­கி­யவர் பிராங்க் டேரபான்ட்.

இதில் ஆன்டி டஃப்ரேன் என்ற கதா­பாத்­தி­ரத்தில் டிம் ரொபின்ஸ் நடித்­தி­ருந்தார். இந்தக் கதை­நாயகன் டஃப்ரேன் ஒரு பேங்கர், தன் மனை­வி­யையும் அவ­ரது காத­ல­ரையும் கொலை செய்­த­தற்­காக ஷாஷேங்க் மாகாண சிறையில் பல ஆண்­டுகள் அடைக்­கப்­ப­டு­மாறு தண்­டிக்­கப்­ப­டு­கிறார்.

ஆனால் உண்­மையில் இவர் கொலை செய்­ய­வில்லை, சந்­தர்ப்ப சாட்­சி­யங்கள் இவ­ருக்கு எதி­ராக மிகப்­பெ­ரிய கொடூ­ர­மான தண்­டனை இவ­ருக்கு அளிக்­கப்­படும். இங்கு ரெட் என்ற கதா­பாத்­தி­ரத்தில் நடித்த மோர்கன் ஃப்ரீமன் நட்பு இவ­ருக்கு சிறையில் கிடைக்­கி­றது.

சிறையில் நடக்கும் கொடூ­ரங்கள், இவர் தான் கொலை செய்­ய­வில்லை என்­ப­தற்கு சுமார் 19 ஆண்­டுகள் கழித்து சிறைக்குள் வரும் இளைஞர் ஒரு­வரின் கதை மூலம் நிரூ­பணம் கிடைக்­கி­றது, ஆனால் வார்­ட­னிடம் இதைக் கூறும்­போது வார்டன் ஏற்றுக் கொள்ள மாட்டார், இவர் சிறை வார்­டனின் ஊழல் புகார்­களை அம்­ப­லப்­ப­டுத்­துவேன் என்று மிரட்­டுவார்.

இத­னை­ய­டுத்து சிறைத்­தண்­ட­னைக்குள் தண்­ட­னை­யாக ஒரு வெளிச்சம் புகா தனிமை சிறையில் 2 மாதங்கள் அடைக்க வார்டன் உத்­த­ர­வி­டு­வ­தோடு இவர் விடு­த­லை­யா­வ­தற்குக் கிடைத்த புதிய சாட்­சி­யையும் வார்டன் ‘சிறை­யி­லி­ருந்து தப்பிச் செல்ல முயன்­ற­தாக’ என்­க­வுண்­டரில் கொலை செய்து விடுவார்.

சிறையில் இருக்கும் கைதி­களை வெளி­வே­லைக்கு ஒப்­பந்­தத்தில் அனுப்­பு­வதில் கூலி­களை குறைக்கும் விதத்தில் வார்டன் நிறைய லஞ்­சப்­பணம் வாங்கும் கடும் ஊழல்­வா­தி­யாக இருப்பார், அவரை அம்­ப­லப்­ப­டுத்­து­வ­தாக கதைப்­போக்கு மாறும்.

இத்­த­கைய விறு­வி­றுப்­பான ஆனால் மன வேத­னை­ய­ளிக்கக் கூடிய ஒரு படத்தை சுவா­ர­ஸி­ய­மாக எடுத்தும் சரி­வர வசூல் செய்­ய­வில்லை என்­பது இன்­றைய இந்தப் படத்தின் ரசி­கர்­க­ளுக்கு ஆச்­ச­ரி­ய­மாகக் கூட இருக்கும். படத்தின் தலைப்பு சரி­யாக இல்லை என்­பதே வசூல் குறை­வுக்குக் காரணம் என்­கிறார் நாயகன் டிம் ரொபின்ஸ்.
‘ஆம், அந்தத் தலைப்­புதான், அதை ஒரு­வரும் நினைவில் வைத்துக் கொள்ள முடி­ய­வில்லை.

இவ்­வாறு கூறு­வதில் நியா­யமும் உள்­ளது, படம் வெளி­யாகி ஆண்­டுகள் சென்ற பிறகும் என்­னிடம் வரும் ரசி­கர்­களில் சிலர் என்­னிடம், நீங்கள் நடித்த ஸ்க்ரிம்ஷா ரிடக் ஷன் பார்த்தேன், ஷிம்மி ஷிம்மி அல்­லது ஷேக், ஷேங்ஷா என்று பெயரை மாற்றி மாற்­றியே கூறி தங்­க­ளுக்கு அந்தப் படம் பிடித்­தி­ருப்­ப­தாகக் கூறு­வார்கள், பல வழி­மு­றை­களில் மக்கள் அதன் பெயரை தவ­றா­கவே புரிந்து வைத்­தி­ருந்­தனர்’ என்று டிம் ரொபின்ஸ் படத்தின் 25 ஆண்­டுகள் நிறை­வை­யொட்டி எண்­டெர்­டெய்ன்மெண்ட் வீக்லி என்ற இத­ழுக்கு அளித்த பேட்­டியில் தெரி­வித்­துள்ளார்.

சிறந்த படத்தின் தாத்­ப­ரியம் என்­ன­வெனில் அதன் பெயர் மக்கள் காது­களில் எப்­போதும் ஒலித்துக் கொண்­டி­ருப்­ப­துதான் என்­கிறார் டிம் ரொபின்ஸ். ‘நம் வாழ்க்­கையில் நம்மை பல்­வேறு விஷ­யங்கள் சிறைப்­ப­டுத்தும். சில நேரங்­களில் நமக்குப் பிடிக்­காத பணியில் நாம் இருக்க நேரிடும், பிடிக்­காத வேலையில் இருந்­தே­யாக வேண்டும் என்ற கட்­டாயம் ஏற்­படும். சில சம­யங்­களில் நம்மைக் காயப்­ப­டுத்தும் உற­வு­களைச் சரி செய்ய முயற்சி செய்வோம், சில வேளை­களில் நாம் பிறக்கும் சூழ்­நி­லை­களும் நம்மைச் சிறைப்­ப­டுத்தும்.

துன்பம் துய­ரத்­தி­லி­ருந்து மீண்டு வருதல், கடந்­த­கால துயர்­மிகு அனு­ப­வங்­க­ளி­லி­ருந்து மீளுதல் இவை­யெல்­லாமே நம் வாழ்க்­கையில் நமக்கு சுதந்­திரம் இல்லை என்­ப­தற்­கான விஷ­ய­மாக மாறு­வ­துதான், இந்தப் படம் நம்முள் இருக்கும் சுதந்­தி­ரத்தை பேசுகிறது.

அதாவது சூழ்நிலைக் கைதியாக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வழியில் முறையாக அணுகினால் சுதந்திரம் சாத்தியம் என்பதையே இந்தப் படம் சொல்கிறது. இந்தக் கதைக்கருவும் மக்கள் மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலிப்பதாகும்’ என்றார் படத்தின் நாயகன் டிம் ரொபின்ஸ். (இந்து தமிழ்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!