உலகக் கிண்ண றக்பியில் ஆஸியை வீழ்த்திய இங்கிலாந்து அரை இறுதிக்குத் தகுதி

England beat Australia 40-16 to make Rugby World Cup semi-finals

0 1,322

உலகக் கிண்ண றக்பி சுற்றுப்போட்டியின் அரை இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. 

கால்இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி 40-16 புள்ளிகளால் வீழ்த்தி இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. 

ஜப்பானின் ஒய்ட்டா நகரில் இன்று சனிக்கிழமை இக்கால் இறுதிப் போட்டி நடைபெற்றது.

கடந்த 12 வருடங்களில் உக கிண்ண அரை இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்துஅணி தெரிவாகியமை இதுவே முதல் தடவையாகும்.

இங்கிலாந்து அணி 2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் சம்பியனாகியது. அவுஸ்திரேலியஅணி 1991 மற்றும் 1997 ஆம் ஆண்டு உலகக்கிண்ண சம்பியனாகியது. 2003 ஆம் ஆண்டிலும் இறுதியாக 2015 ஆம் ஆண்டு நடந்தஉலகக்கிண்ணத் தொடரிலும் அவ்வணி இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!