டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் குவித்து ரோஹித் சர்மா சாதனை

Rohit Sharma breaks world record for most sixes in a Test series

0 1,413

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரொன்றில் அதிக சிக்ஸர்களை குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

தென் ஆபிரிக்க அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 3 ஆவதுடெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் ரன்ச்சி நகரில் இன்று ஆரம்பமாகியது.

இப்போட்டியில் ரோஹித் சர்மா தனது 6 ஆவது டெஸ்ட் சதத்தை குவித்தார். டேன் பீட்டின் பந்துவீச்சில் சிக்ஸர் ஒன்றை அடித்து இச்சதத்தை அவர் பூர்;த்தி செய்தார். 164 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்ஸர்கள் , 14 பவுண்டறிகள் உட்பட ஆட்டமிழக்காம் 117 ஓட்டங்களைப்பெற்றார்.

இத்தொடரில் ரோஹித் சர்மா 17 சிக்ஸர்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வீரர் ஒருவர் குவித்த ஆகக் கூடுதலான சிக்ஸர் எண்ணிக்கை இது.

மேற்கிந்திய வீரர் சிம்ரோன் ஹேட்மேயர் 2018 நவம்பரில் பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடரில் 15 சிக்ஸர்களைக் குவித்தமையே இதுவரை சாதனையாக இருந்தது.

இந்திய வீரர்களில் ரோஹித் சர்மாவுக்கு முன்னர் ஒரு தொடரில் அதிக சிக்ஸர்களை குவித்தவர் ஹர்பஜன் சிங் ஆவார். 2010, 2011 ஆம் ஆண்டு நியூஸிலாந்துடனான தொடரில் அவர் 14 சிக்ஸர்களை குவித்திருந்தார்.

இன்றைய ஆட்டமுடிவின்போது இந்திய அணி 3 விக்கெட்இழப்புக்கு 224 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!