தோனியின் எதிர்காலம் குறித்து அடுத்தவாரம் ஆலோசிக்கப்படும் -இந்திய கிரிக்கெட் சபையின் புதிய தலைவர் சௌரவ் கங்குலி

0 46

இங்­கி­லாந்தில் இவ் வருட மத்­தியல் நடந்­து­மு­டிந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்கு பின்­னர சர்­வ­தேச கிரிக்­கெட்டில் இருந்து தொனி ஓய்வு பெறுவார் என தகவல் வெளி­யா­னது. ஆனால், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்குப் பின்னர் இரண்டு மாதங்கள் ஓய்வு எடுப்­ப­தாக தோனி கூறி­யி­ருந்தார்.

இதனை அடுத்து தோனியின் எதிர்­கால கிரிக்கெட் குறித்தும் ஓய்­வு­பெ­று­வது குறித்தும் அவரே தீர்­மா­னிப்பார் எனவும் அவரை ஓய்­வு­பெற வற்­பு­றுத்­தக்­கூ­டாது எனவும் முன்னாள் வீரர்கள் சிலர் தெரி­வித்­தி­ருந்­தனர்.

மேலும் ஓய்வு குறித்து தோனி­யிடம் கலந்­தா­லோ­சிப்­பதே நலம் எனவும் அவர்கள் கூறி­யி­ருந்­தனர்.

இந் நிலையில் இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையின் புதிய  தலை­வ­ராக போட்­டி­யின்றித் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள முன்னாள் அணித் தலைவர் சௌரவ் கங்­குலி, தோனியின் எதிர்­காலம் குறித்து எதிர்­வரும் 24ஆம் திகதி ஆலோ­சிக்­கப்­படும் என்று தெரி­வித்தார்.

இந்­திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு­வி­னரை எதிர்­வரும் 24ஆம் திகதி சந்­தித்து ஆலோ­சனை நடத்­த­வுள்­ள­தா­கவும் அப்­போது தோனியின் எதிர்­காலம் குறித்து தேர்­வுக்­கு­ழு­வினர் என்ன கரு­து­கின்­றார்கள் என்­பது குறித்து கேட்­ட­றி­ய­வுள்­ள­தா­கவும் கங்குலி குறிப்பிட்டார். அதன் பின்னரே தனது கருத்தை வெளி யிடுவதாக அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!