வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 21: 1987-யாழ் வைத்தியசாலை படுகொலைகள் இடம்பெற்றன

0 254

1520: போர்த்துகேய மாலுமி, பேர்டினண்ட் மகெலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகலன் நீரிணை எனப் பெயர்பெற்றது.

1805: ஸ்பெய்னின் டிரபல்கார் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு,  மற்றும் ஸ்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ஆம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.

1987: யாழ் வைத்தியசாலை படுகொலைகள் இடம்பெற்றன

1805 : ஊல்ம் என்ற இடத்தில் நெப்போலியனின் பெரும் இராணுவத்திடம் ஆஸ்திரியா சரணடைந்தது.

நெப்போலியனால் 30,000 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

1824 : ஜோசப் ஆஸ்ப்டின் போர்ட்லண்ட் சீமெந்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1833: நோபல் பரிசை ஆரம்பித்த சுவீடன் நாட்டு கண்டுபிடிப்பாளரான அல்பிரட் நோபல், பிறந்தார்.

1837 : அமெரிக்கப் பழங்குடித் தலைவர் ஒசியோலா கைது செய்யப்பட்டார்.

1854 : புளோரன்ஸ் நைட்டிங்கேல் மற்றும் 38 தாதிகள் கிரிமியன் போர் முனைக்கு அனுப்பப்பட்டனர்.

1879 : தோமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணித்தியாலங்கள் எரிந்தது.

1892 : உலக கொலம்பியக் கண்காட்சி சிக்காகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893, மே 1 ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.

1895 : தாய்வான் தீவில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த போர்மோசா குடியரசு ஜப்பானியப் படைகளின் முற்றுகையினால் வீழ்ந்தது.

1944 : கிறகுஜேவாச் படுகொலைகள்: நாஸி ஜேர்மனியப் படைகள் 7,000 சேர்பியர்களை படுகொலைச் செய்தனர்.

1944 : ஜப்பானின் முதலாவது கமிகசே ஜப்பானிய விமானத் தற்கொலைத் தாக்குதல்இ அவுஸ்திரேலிய கப்பல் மீது நடத்தப்பட்டது.

1945 : பிரான்ஸில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1959: அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்த வார்னர் பிரவுன் உட்பட ஜேர்மனிய ரொக்கெட் விஞ்ஞானிகள் குழுவினரை அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து நாஸா நிறுவனத்துக்கு மாற்றும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ஐஸனோவர் கையெழுத்திட்டார்.

1966 : பிரிட்டனின் வேல்ஸில் அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் நிலக்கரி கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் கொல்லப்பட்டனர்.

1969 : சோமாலியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றினார்.

1983 : நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17ஆவது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1,299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளம் ஒரு மீற்றர் என வரையறுக்கப்பட்டது.

1987 : யாழ் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினரால் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 60 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1994 : தென்கொரியாவின் சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

1994: வடகொரியா தனது அணுவாயுத திட்டத்தை நிறுத்துவதற்கும் கண்காணிப்பு அனுமதி வழங்கவூம் இணக்கம் தெரிவித்து அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!