போலிக் கடவுச்சீட்டில் இலங்கை வந்த சிரியாவைச் சேர்ந்த டாக்டரும் மனைவியும் பிள்ளையுடன் திருப்பி அனுப்பப்பட்டனர்!

0 1,252

                                                                                                                                                       (ரெ.கிறிஷ்காந்)
போலியான ஐக்கிய அரபு இராச்சிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற சிரியாவைச் சேர்ந்த பல் வைத்தியர் ஒருவரின் குடும்பம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இக்குடும்பத்தின் தலைவராக கருதப்படும் 29 வயதான பல் வைத்தியர், அவரது மனைவியான 28 வயது பெண் மற்றும் அவர்களது ஒரு வயதான பிள்ளை ஆகியோரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (20) அதிகாலை 5.40 மணியளவில், துபாயிலிருந்துவந்த எமிரேட்ஸ் விமான சேவையின் ஈ.கே. 654 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.. 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!