கோட்டாவின் கூட்டங்களில் கலந்து கொள்ளமாட்டேன்! – தயாசிறி ஜயசேகர

0 1,466

                                                                                                                                                       (எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்க்ஷவின் தேர்தல் பிரசார கூட்டங்களில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் போது, பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்படுகின்றமைக்கு தீர்வு காணும் வரையில் தான் கோட்டாவின் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்க்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தயாசிறி ஜயசேகர கலந்து கொள்ளப் போவதில்லை எனவும், சு.கவின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் சுதந்திரக் கட்சியின் ஊடகப்பிரிவின் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பதிவு குறித்து வினவிய போதே தயாசிறி இவ்வாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!