இறக்குமதி செய்யப்படும் மீன், மிளகாயின் வரிகள் குறைப்பு!

0 115

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் காய்ந்த மிளகாய் ஒரு கிலோவின் இறக்குமதி வரி 20 ரூபாவாகவும்  இறக்குமதி செய்யப்படும் மீன் வகைகளுக்கான வரி கிலோ ஒன்றுக்கு 25 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக வாழ்க்கைச் செலவுகள் குறித்து ஆராயும் குழுவின் தலைவர் அமைச்சர் பி. ஹரிஸன் தெரிவித்தார்.

இறக்கு மதி செய்யப்படும் காய்ந்த மிளகாய் ஒரு கிலோவுக்கு இதற்கு முன்னர் இறக்குமதி வரி 25 ரூபாவாகவும், மீனின் இறக்குமதி வரி 100 ரூபாவாகவும் காணப்பட்டன.

அரச களஞ்சியசாலையில் தற்போது உள்ள நெல் 48,000 மெற்றிக் தொன் சிறு மற்றும் மொத்த நெல் உற்பத்தி யாளர்களின் ஊடாக விரைவாக அரிசியாக்கி அதனை சதொச ஊடாக நாடு அரிசி ஒரு கிலோ, 80 ரூபாவிலும், சம்பா ஒரு கிலோ 85 ரூபாவிலும், விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வாழ்க்கை செலவு குறித்து ஆராயும் குழு குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!