19 வயதான யுவதி செலுத்திய ஆட்டோ மோதியதில் 83 வயது பெண் உயிரிழப்பு; கம்பளையில் சம்பவம்!

0 865

(கம்­பளை நிருபர்)

83 வய­தான பெண் ஒருவர் 19 வயது யுவதி செலுத்­திய முச்­சக்­கர வண்டி மோதி­யதில் குறித்த பெண் உயி­ரி­ழந்­துள்ளார். இத­னை­ய­டுத்து கைது செய்­யப்­பட்ட யுவதி­ கம்­பளை நீதி­மன்றில் நேற்று ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது அவரை எதிர்­வரும் 23 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார்.

உலப்­பனை மாவெல வீதியை சேர்ந்த உயி­ரி­ழந்த பெண் சம்­ப­வ­தி­ன­மான வெள்­ளிக்­கி­ழமை உலப்­பனை பிர­தே­சத்தில் கம்­பளை – நாவ­லப்­பிட்டி பிர­தான வீதியை கடக்க முற்­பட்ட. சந்­தர்ப்­பத்தில் குறித்த யுவதி செலுத்­திய முச்­சக்­கர வண்­டியில் மோதுண்டு படு­கா­ய­ம­டைந்த நிலையில் நாவ­லப்­பிட்டி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்

இத­னை­ய­டுத்து கைது செய்­யப்­பட்ட யுவ­தியை கம்­பளை மாவட்ட நீதி மன்றில் நீதவான் ஸ்ரீ நித் விஜேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!