கிரிக்கெட் துறைசார் விடயங்களை புறக்கணிப்பதென பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் தீர்மானம்: இந்தியாவுக்கான கிரிக்கெட் விஜயம் கேள்விக்குறி

0 97

இந்­தி­யா­வுக்கும் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இடையில் ரன்ச்சி, ஜார்காந்த் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் ஐ.சி.சி. டெஸ்ட் சம்­பி­யன்ஷிப் மற்றும் சுதந்­திரக் கிண்ண டெஸ்ட தொடரின் மூன்­றா­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் போட்­டியில் தென் ஆபி­ரிக்கா மற்­றொரு படு­தோல்­வியை எதிர்­நோக்­கி­யுள்­ளது.

தென் ஆபி­ரிக்­காவின் பின்­வ­ரிசை துடுப்­பாட்ட வீரர்­களால் இந்­தி­யாவின் வெற்றி நான்காம் நாள் வரை தள்­ளிப்­போ­டப்­பட்­டுள்­ளது.
முத­லா­வது இன்னிங்ஸ் நிறைவில் இந்­தி­யாவை விட 335 ஓட்­டங்கள் பின்­னி­லையில் இருந்­ததால் இரண்­டா­வது இன்­னிங்ஸில் தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தாட நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட தென் ஆபி­ரிக்கா பெருந் தடு­மாற்­றத்தை எதிர்­கொண்­டதுடன் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடி­வின்­போது 8 விக்­கெட்­களை இழந்து 132 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்­றி­ருந்­தது.

இன்னிங்ஸ் தோல்­வி­யி­லி­ருந்து மீள்­வ­தற்கு தென் ஆப­ிரிக்கா மேலும் 203 ஓட்­டங்­களை பெற­வேண்டும். தென் ஆபி­ரிக்­கா­வினால் இதனை நினைத்­துக்­கூடப் பார்க்க முடி­யாது.

மேலும் இப் போட்டி நான்காம் நாளான இன்று காலை பெரும்­பாலும் வேளை­யோடு முடி­வுக்கு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

போட்­டியின் மூன்றாம் நாளான நேற்றுக் காலை தனது முத­லா­வது இன்­னிங்ஸை 2 விக்கெட் இழப்­புக்கு 9 ஓட்­டங்கள் என்ற நிலை­யி­லி­ருந்து தொடர்ந்த தென் ஆபி­ரிக்கா, இந்­திய பந்­து­வீச்­சா­ளர்­க­ளுக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாமல் 162 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.

தென் ஆபி­ரிக்க துடுப்­பாட்­டத்தில் ஸுபைர் ஹம்ஸா (62), ஜோர்ஜ் லிண்டே (37), டெம்பா பவுமா (32) ஆகிய மூவரே ஓர­ளவு பிர­கா­சித்­தனர்.

இந்­திய பந்­து­வீச்சில் உமேஷ் யாதவ் 40 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் ரவீந்த்ர ஜடேஜா 19 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­க­ளையும் மொஹமத் ஷமி 22 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­க­ளையும் ஷாஹ்பாஸ் நடீம் 22 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றினர்.

இதனை அடுத்து இந்­திய அணித் தலைவர் விராத் கோஹ்­லி­யினால் தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தாட நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட தென் ஆபி­ரிக்கா, இரண்­டா­வது இன்­னிங்­ஸிலும் சோடை போன­துடன் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடி­வின்­போது 8 விக்­கெட்­களை இழந்து 132 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

தென் ஆபி­ரிக்­காவின் முன்­வ­ரிசை துடுப்­பாட்ட வீரர்­களில் ஒரு­வரைத் தவிர ஏனையோர் ஒற்றை இலக்க எண்­ணிக்­கை­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க ஒரு கட்­டத்தில் 67 ஓட்­டங்­க­ளுக்கு 6 விக்­கெட்­களை இழந்­தி­ருந்­தது. முன்­வ­ரி­சையில் டின் எல்கர் 16 ஓட்­டங்­களைப் பெற்றார்.

எனினும் பின்­வ­ரிசை வீரர்­க­ளான ஜோர்ஜ் லிண்டே (27), டேன் பியெட் (23), தியூனிஸ் டி ப்றயன் (30 ஆ. இ.) கெகிசோ ரபாடா (12) ஆகியோர் ஓர­ளவு பொறுப்­பு­ணர்­வுடன் துடுப்­பெ­டுத்­தாடி இந்­தி­யாவின் வெற்­றியை நான்­கா­வது நாளுக்கு பிற்­போட்­டனர். அன்ரிச் நோர்ஜே 5 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்­காமல் இருந்தார்.

இந்­திய பந்­து­வீச்சில் மொஹமத் ஷமி 10 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் உமேஷ் யாதவ் 35 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றினர்.இந்­தியா அதன் முத­லா­வது இன்­னிங்ஸை 9 விக்கெட் இழப்­புக்கு 497 ஓட்­டங்­க­ளுடன் நிறுத்திக்கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!