தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் வீரர்கள் விலைப் பட்டியலிலிருந்து ட்ரென்ட் ரொக்கெட் அணியினால் ராஷித் கான் தெரிவு

மாலிங்க, கேல், ரபாடா ஆகியோர் கருத்தில் கொள்ளப்படவில்லை

0 110

பிரித்­தா­னி­யாவில் முதல் தட­வை­யாக அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள ‘தி ஹண்ட்ரட்’ (நூறு பந்­துகள் கிரிக்கெட்) போட்­டிக்­கான வீரர்­களைத் தெரிவு செய்து அணி­க­ளுக்குள் உள்­வாங்கும் முதற் கட்டப் பணிகள் ஞாயி­றன்று நிறை­வு­பெற்­றன.

விலைப்­பட்­டி­யலில் இடம்­பெற்ற வீரர்­களில் முத­லா­ம­வ­ராக வாங்­கப்­பட்­டவர் ஆப்­கா­னிஸ்தான் அணித் தலை­வரும் சுழல்­பந்­து­வீச்­சா­ள­ரு­மான ராஷித் கான் ஆவார். இவரை ட்ரென்ட் ரொக்கெட் அணி 125,000 ஸ்டேர்லிங் பவுண்ட்­க­ளுக்கு வாங்­கி­யது.

அவுஸ்­தி­ரே­லியா வீரர்­க­ளான ஸ்டீவ் ஸ்மித், மிச்செல் ஸ்டார்க் ஆகிய இரு­வரும் வெல்ஷ் பயர் அணிக்­காக விளi­யா­ட­வுள்­ள­துடன் அவர்­க­ளது சக நாட்டு வீரர் டேவிட் வொர்­னரை சதர்ன் ப்ரேவ் அணி விலைக்கு வாங்­கி­யுள்­ளது.

இலங்­கையின் யோர்க்கர் மன்னர் லசித் மாலிங்க, மேற்­கிந்­தியத் தீவு­களின் அதி­ரடி ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர் க்றிஸ் கேல், தென் ஆபி­ரிக்க வேகப்­பந்­து­வீச்­சாளர் கெகிசோ ரபாடா ஆகி­யோரை எந்த அணியும் கவ­னத்தில் கொள்­ள­வில்லை.

125,000 ஸ்டேர்லிங் பவுண்ட்­க­ளுக்­கான பட்­டி­யலி­லி­ருந்து ராஷித் கானுக்குப் பின்னர் இரண்­டா­வது வீர­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டவர் மேற்­கிந்­தியத் தீவு­களின் சக­ல­துறை வீரர் அண்ட்றே ரசல் ஆவார். இவரை சதர்ன் ப்றேவ் அணி கொள்­வ­னவு செய்­தது.

இதே விலைப்­பட்­டி­யலில் இடம்­பெற்ற ஆரொன் பின்ச், க்லென் மெக்ஸ்வெல், டி|ஆர்சி ஷோர்ட் (மூவரும் அவுஸ்­தி­ரே­லியா) ஆகி­யோரை முறையே நொர்தன் சுப்­பர்­சார்ஜஸ், லண்டன் ஸ்பிரிட், ட்ரென்ட் ரொக்கெட் ஆகிய அணி­க­ளினால் வாங்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் ராஷித் கானின் சக வீரரும் 18 வய­து­டைய இளம் வீர­ரு­மான முஜிபூர் ரஹு­மானை (125,000 ஸ்.ப.) சுப்­பர்­சார்ஜர்ஸ் அணியும் மற்­றொரு சக வீர­ரான மொஹமத் நபியை (100,000 ஸ்.ப) லண்டன் ஸ்பிரிட் அணியும் உள்­வாங்­கி­யுள்­ளன.

நேபா­ளத்தின் 19 வய­து­டைய இளம் வீரர் சந்தீப் லெமிச்சான் (100,000 ஸ்ப.), மேற்­கிந்­தியத் தீவு­களின் சுனில் நரெய்ன் (125,000 ஸ்.ப.) ஆகிய இரு­வ­ரையும் ஓவல் இன்வின்சிப்ள்ஸ் அணி தெரிவு செய்துள்ளது.

விலைப்பட்டியல்களில் இடம்பெற்ற இலங்கை வீரர்கள் எவரையும் ‘தி ஹண்ட்ரட்’ அணிகள் தெரிவுசெய்யவில்லை.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!