தனக்காக பரீட்சை எழுதுவதற்கு தன்னைப் போன்ற  8 பேரை நியமித்த பங்களாதேஷ் எம்.பி தமன்னா நுஸ்ரத்

Bangladesh MP Tamanna Nusrat, 'hired eight lookalikes' to sit university exams

0 2,644

பங்களாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்காக பல்கலைக்கழக பரீட்சை எழுதுவதற்காக, தன்னைப் போன்ற தோற்றமுடைய வேறு பெண்களை வைத்து நியமித்தமை அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அவர் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

தமன்னா நுஸ்ரத் எம்.பி.


தமன்னா நுஸ்ரத் எனும் என்பவரே இவ்வாறு பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்தார் என எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பங்களாதேஷின் ஆளும் அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

தமன்னா நுஸ்ரத் குறைந்தபட்சம்  13 பரீட்சைகளில் தனக்கு பதிலாக வேறு பெண்களை பரீட்சை எழுத வைக்க ஏற்பாடு செய்ததாகவும் இதற்காக தன்னைப் போன்ற தோற்றமுடைய  8 பெண்களை நியமித்திருந்ததாகவும்   ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.

தமன்னா நுஸ்ரத்துக்கு பதிலாக பரீட்சை எழுதிய பெண் (இடது)இ தொலைக்காட்சியொன்றில் தமன்னா நுஸ்ரத் (வலது)


தனியார் தொலைக்காட்சியான நகோரிக் ரீவி, பரீட்சை மண்டபம் ஒன்றுக்குள் சென்று, தமன்னா நுஸ்ரத் என்ற பெயரில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த பெண்ணொருவருடன் விவாதித்தது. இதன்போது பதிவான வீடியோ வைரலாகியது.

பங்களாதேஷ் திறந்த பல்கலைக்கழகத்தில் துமன்னா நுஸ்ரத் பி.ஏ. பட்டப்படிப்பை பயின்று வந்தார்.

ஆள் மாறாட்ட சர்ச்சையை அடுத்து அவர் பல்கலைக்கழகத்திலிருந்து  வெளியேற்றப்பட்டுள்ளர் என  அப்பல்கலைக்கழகத்தின்  தலைவர் எம்.ஏ.மனான் தெரிவித்துள்ளார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!