அமெரிக்காவில் பாலியல் சர்ச்சையில் சிக்கிய பெண் எம்.பி. இராஜினாமா!

0 2,123

பாலியல் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான கெய்டி ஹில் அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

கெய்ட்டி ஹில்

 

32 வயதான கெய்டி ஹில் அமெரிக்காவில் கடந்த வருடம் நடந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் கலிபோர்னியா மாகாணத்திலிருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

கெய்ட்டி ஹில், மோர்கன் டெஸ்ஜார்டின்ஸ் கெய்ட்டி ஹில்லின் கணவர் கென்னி ஹெஸ்லெப்

 

கெய்ட்டி ஹில்லும், அவரின் கணவரும் ஹில்லின் தேர்தல் பிரசாரத்தில் பணியாற்றிய மோர்கன் டெஸ்ஜார்டின்ஸ் எனும் 24 வயதான யுவதியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக அண்மையில் செய்தி வெளியாகியது.

ஹில்லும், அந்த பெண் ஊழியரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாகின
அதைத் தொடர்ந்து கெய்ட்டி ஹில், தனது நாடாளுமன்ற இயக்குனரான கிரஹாம் கெல்லி எனும் இளைஞருடன் செக்ஸ் உறவு வைத்திருந்தார் என அந்த சமூக வலைத்தளம் செய்தி வெளியிட்டது.

கெய்ட்டி ஹில், மோர்கன் டெஸ்ஜார்டின்ஸ்

 

இந்த புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, தனக்கும், கிரஹாம் கெல்லிக்கும் இடையே செக்ஸ் உறவு இருக்கவில்லை என கெய்டி ஹில் மறுத்தார். அதே நேரத்தில் தனது தேர்தல் பிரசாரத்தில் பணியாற்றிய ஊழியருடன் உறவு வைத்திருந்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.

கிரஹாம் கெல்லி

மேலும் இணையத்தளமொன்றில் வெளியான படங்கள் தனது அனுமதியின்றி வெளியிடப்பட்ட படங்கள் என்றும், அந்த படங்கள் வெளியானதற்கு தற்போது விவாகரத்து செய்ய இருக்கும் தனது கணவர் ஹெஸ்லப்தான் பொறுப்பு என்றும் கெய்ட்டி ஹில் குறிப்பிட்டார்.

என்னை அவமானப்படுத்தும் முயற்சியில் ஹெஸ்லப் உறுதியாக உள்ளதாக தெரிகிறது எனவும் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊழியர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது தொடர்பாக நாடாளுமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு எதிரானது, கெய்ட்டி ஹில்லின் செயல் என வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டது.

கெய்ட்டி ஹில்லுக்கும், அவரின் நாடாளுமன்ற இயக்குனர் கிரஹாம் கெல்லிக்கும் இடையே இருந்ததாக கூறப்படும் செக்ஸ் உறவு பற்றி விசாரிக்கப்படும் என நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் நெறிமுறைகள் குழு அறிவித்தது.

இது தொடர்பாக அந்த குழு கூறுகையில், ‘கெய்ட்டி ஹில், தனது நாடாளுமன்ற இயக்குனருடன் உறவு வைத்துக் கொண்டுள்ளதாக பொது வெளியில் எழுந்துள்ள புகார்கள் பற்றி நாங்கள் அறிவோம். தனது நாடாளுமன்ற இயக்குனருடன் அவர் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டிருக்கக்கூடும். இது பற்றி நாங்கள் விசாரிக்கிறோம்’ என்று குறிப்பிட்டது.

கெய்ட்டி ஹில்

இந்த நிலையில், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கெய்ட்டி ஹில் இராஜினாமா செய்துள்ளார்.

அதில் அவர், ‘உடைந்து போன உள்ளத்தோடு எனது இராஜினாமாவை நான் அறிவிக்கிறேன்.

இது நான் செய்தாக வேண்டிய கடினமான காரியம். ஆனால் இது எனது வாக்காளர்களுக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும் செய்யக்கூடிய மிகச்சிறந்த காரியம் என்று நான் நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

தனது செயலுக்காக அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!