இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட் சம்பியன் கிண்ணங்களை இன்று அறிமுகம் செய்கிறார் கரீனா கபூர்

Kareena Kapoor to unveil T20 World Cup trophies in Melbourne

0 848

அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளுக்கான சம்பியன் கிண்ணங்களை பொலிவூட் நடிகை கரீனா கபூர் அறிமுகப்படுத்தவுள்ளார்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளன.

இவ்விரு போட்டிகளுக்குமான சம்பியன் கிண்ணங்கள் நடிகை கரீனா கபூர் மூலம் வெளியிடப்படவுள்ளன.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வைபவத்தில் இச்சம்பியன் கிண்ணங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இந்நிகழ்வில் நான் பங்குபற்றுவது எனக்கு கிடைக்கும் கௌரவமாகும் என கரீனா கபூர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும கூறுகையில், ‘இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் அனைத்து நாடுகளின் பெண்களும் தமது கனவை நனவாக்குவதற்கு நான் ஊக்குவிக்க விரும்புகிறேன்.

சர்வதேச களமொன்றில் அவர்கள் நிற்பதைக் காண்பது உண்மையிலேயே வலுவூட்டதாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பெண்களுக்கான போட்டிகள் அவுஸ்திரேலியாவில்  பெப்ரவரி 21 முதல் மார்ச் 8 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன.

ஆண்களுக்கான போட்டிகள் அடுத்த வருடம் ஒக்டோபர் 18 முதல் நவம்பர் 15 ஆம் திகதிவரை அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!