ஐஸ்வர்யா ராயின் முகாமையாளரை தீயிலிருந்து காப்பாற்றினார்  நடிகர் ஷாருக் கான்;  ஹீரோ என புகழ்க்கிறார் சல்மான் கான்

0 156

நடிகை ஐஸ்வர்யா ராயின் முகாமையாளரான அர்ச்சனா சதானந்தை தீயிலிருந்து நடிகர் ஷாருக் கான் காப்பாற்றியுள்ளார். இதையடுத்து ஷாருக் கானை ஒரு ஹீரோ என நடிகர் சல்மான் கான் புகழ்ந்துள்ளார்.

 நடிகர் அமிதாப் பச்சன் நடத்திய தீபாவளி விருந்தில் பொலிவூட் நட்சத்திரங்கள் உட்பட பலர் பங்குபற்றினர். இந்நிகழ்வில் ஐஸ்வர்யா ராயின் முகாமையாளரான அர்ச்சனா சதானந்தும் தனது மகளுடன் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது அர்ச்சனா சதானந்தின் லெஹேங்கா ஆடை விளக்கு ஒன்றின் மூலம் தீப்பற்றிக்கொண்டது. நடிகர் ஷாருக் கான் தான் இதை அவதானித்தவுடன் அவரே முதலில் ஓடிவந்து தீயை அணைத்தார். துpங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் ஏற்பட்டது.

இத்தீயினால் அர்ச்சனாவின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. அதையடுத்து அவர் மும்பையிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.

ஷாருக் கானும் இச்சம்பவத்தில் சிறிய காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராயின் முகாமையாளராக 10 வருடங்களுக்கு மேலாக அர்சனா பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனது மனைவி கௌரி கானுடன் இந்நிகழ்வில் பங்குபற்றிய ஷாருக் கான், தீ பரவுதைக் கண்டவுடன் வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் தீயை அணைக்க விரைந்தார் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தையடுத்து ஷாருக் கான் ஒரு ஹீரோ என நடிகர் சல்மான் கான் புகழ்ந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!