காட்டுத் தீயினால் வீட்டிலிருந்த வெளியேற்றப்பட்ட ஆர்னோல்ட்! ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ சிறப்புக் காட்சி இரத்து!

0 71

அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பர­விய காட்­டுத்­தீயால் அமெ­ரிக்­காவின் ஹொலிவூட் நடத்­தி­ரங்கள் உட்­பட முக்­கியப் பிர­ப­லங்கள் பலரும் நள்­ளி­ரவில் வீட்­டை­விட்டு வெளியேற நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர். நடிகர் ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்­நெ­கரும் இவர்­களில் ஒரு­வ­ராவார்.

லொஸ் ஏஞ்சல்ஸில் பர­விய காட்­டுத்­ தீ

 

லொஸ் ஏஞ்­சல்ஸில் உள்ள ப்ரெண்ட்வுட் பகு­தியில் பயங்­க­ர­மான காட்­டுத்தீ கடந்த திங்­கட்­கி­ழமை பர­வி­யது. இதனால், பல பில்­லியன் டொலர் மதிப்­புள்ள பிர­ப­லங்­களின் வீடுகள் தீக்கி­ரை­யா­கின. காட்­டுத்தீ எச்­ச­ரிக்­கையால் திடீ­ரென வீட்­டை­விட்டு வெளி­யே­றினர்.

நடிகர் ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்­நெ­கரின் வீட்­டுக்கு அருகில் தீ பர­வி­யதால் தீணைப்பு வீரர்­களால் அவரும் அவரின் குடும்­பத்­தி­னரும் வெளி­யேற்­றப்­பட்­டனர்.

அதி­காலை 3..30 மணி­ய­ளவில் தாம் பாது­காப்­பாக வெளி­யேற்­றப்­பட்­ட­தாக ஆர்னோல்ட் தெரி­வித்தார்.
ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்­நெகர் நடிகை லிண்டா ஹெமில்டன் ஆகியேர் நடித்த ‘டெர்­மி­னேட்டர் : டார்க் ஃபேட்’ (Terminator: Dark Fate) எனும் திரைப்­படம் அமெ­ரிக்­காவில் இன்று வெளி­யா­­கி­றது.

இத்­தி­ரைப்­ப­டத்தின் சிறப்புக் காட்சி கடந்த திங்­கட்­கி­ழமை லொஸ்­ஏஞ்­சல்ஸின் ஹொலிவூட் நக­ரி­லுள்ள திரை­யரங்கு ஒன்றில் காண்பிக்கப்படவிருந்தது.

ஆனால், காட்டுத் தீ காரணமாக இந்நிகழ்ச்சி இரத்துச்செய்யப்பட்டது.

நடிகை லிண்டா ஹெமில்டன், ஆர்னோல்ட்

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!