டெய்லர் ஸ்விப்ட்டுக்கு தசாப்தத்தின் மிகச் சிறந்த இசைக் கலைஞருக்கான விருது

0 1,145

அமெ­ரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்­டுக்கு இந்த தசாப்­தத்தின் மிகச் சிறந்த இசைக் கலை­ஞ­ருக்­கான விருது வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இவ்­வ­ருட அமெ­ரிக்க இசை விருது வழங்கல் விழாவில் டெய்லர் ஸ்விப்ட்­டுக்கு இவ்­வி­ருது வழங்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. டிக் கிளார்க் நிறு­வ­னமும், ஏ.பி.சி. தொலைக்­காட்சி நிறு­வ­னமும் கடந்த 30 ஆம் திகதி இவ்­வ­றி­விப்பை விடுத்­தன.

பாடகி டெய்லர் ஸ்விப்ட், 2006 ஆம் ஆண்டு தனது முதல் அல்­பத்தை ‘டெய்லர் ஸ்விப்ட்’ என்ற பெய­ரி­லேயே வெளி­யிட்டார்.

இசைத்­து­றையில் ஏரா­ள­மான விரு­து­களை வென்­றவர் அவர்.

29 வய­தான டெய்லர் ஸ்விப்ட் இசைத்­து­றையில் அதிக வரு­மானம் பெற்­ற­வர்­களில் ஒரு­வ­ரா­கவும் விளங்­கு­கிறார்.

கடந்த ஒரு வருட காலத்தில் உலகில் அதிக வரு­மானம் பெற்ற பாட­கி­களின் பட்­டி­ய­லிலும் டெய்லர் ஸ்விப்ட் முத­லி­டத்தில் உள்ளார் என போர்ப்ஸ் சஞ்­சிகை அண்­மையில் தெரி­வித்­தி­ருந்­தது.

2018 முதல் 2019 ஜுன் வரை­யான காலத்தில் பெற்ற வரு­மா­னங்­களின் அடிப்­ப­டையில் இப்­பட்­டியல் தயா­ரிக்­கப்­ப­ட்டி­ருந்­தது.

இக் காலப்­ப­கு­தியில் டெய்லர் ஸ்விப்ட் 185 மில்­லியன் (18.5 கோடி) டொலர்­களை (சுமார் 3,335 கோடி இலங்கை ரூபா) வருமானமாகப் பெற்றுள்ளார்.

என போர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!