தந்தைக்கு கோயில் கட்டிய சரவணன்

0 74

ஒரு காலத்தில் விஜயகாந்தின் தோற்றத்தில் அவருக்கு போட்டியாக சினிமாவுக்கு வந்தவர் சரவணன். பின்பு தனக்கென தனி பாதை போட்டு ஹீரோவாக நடித்தார்.

பல வருட இடைவெளிக்கு பிறகு ‘பருத்தி வீரன்’ படம் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.

தற்போது வில்லன், கொமடி வேடங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பிக்ெபாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

சரவணன், தன் தந்தைக்கு கோயில் கட்டியுள்ளார்.

தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் வடக்காடு கிராமத்தில் விநாயகர், வீரமுனி ஆகியோருக்கு கோவில் கட்டி உள்ளார்.

அதனுடன் சாமி சிலைகளுக்கு அருகில் தன் தந்தைக்கும் சிலை எழுப்பி உள்ளார். இதன் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இது குறித்து சரவணன் கூறியதாவது: காலத்துக்கும் அப்பா, அம்மா நினைவாக இருக்கட்டும் என அவர்கள் வாழ்ந்த வீட்டை விற்று, வாங்கின நிலத்தில் இந்தக் கோவிலை எழுப்பியிருக்கேன்.

வீரமுனி பீடத்தின் பக்கத்துலேயே அப்பாவுக்கும் சிலை எடுத்திருக்கிறேன். என்னுடைய அப்பா ஒரு பொலிஸ் அதிகாரி.

அதனால் அவர் உருவத்தை அய்யனாராக செதுக்கி சிலையை செய்துள்ளேன். என்னுடைய அப்பா, அம்மாவுக்கு அவர்கள் உயிரோடு இருந்தவரை நான் எதுவும் செய்ய முடியவில்லை. அதற்கு பரிகாரமாக இதனை செய்துள்ளேன். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!