விஜய்யுடன் நடிக்க காத்திருக்கும் அபிராமி

0 83

விஜய் சாருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் எல்லாவற்றையும் போட்டு­விட்டு ஓடிவிடுவேன் என நடிகை அபிராமி வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

டிவி, ெமாடலிங் மூலம் சினிமாவுக்கு வந்தவர் அபிராமி வெங்கடா­சலம். நேர்கொண்ட பார்வை படத்தில் கிடைத்த வரவேற்புக்கு பின்னர் தொடர்ந்து படங்கள், இணைய தொடர்கள் என அடுத்தடுத்து வாய்ப்புகள் வருகின்றன.

சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்ெபாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். 

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறிய­தாவது:- எனது பயணம் எளிதாக இல்லை.

எந்த பின்­புலமும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆடிஷன் மூலமாக மட்டுமே இந்த இடத்துக்கு வந்தேன்.

டிவியில் இருந்து இணைய தொடரில் நடித்தேன். அதன் பின்னர் தான் சினிமா வாய்ப்பு கிடைத்தது.

நேர்கொண்ட பார்வை வாய்ப்பு தான் எனக்கு திருப்புமுனை.

எந்த சிபாரிசும் இல்லாமல் நேரடியாக வந்த வாய்ப்பு அது.

விஜய்யுடன் நடிப்பதற்காக தான் காத்திருக்கிறேன்.

விஜய் சாருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடிவிடுவேன்.

அஜித் சார் ரொம்ப மரியாதையான நபர். நட்புடன் பழகினார்.

குடும்பத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்”. என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!